யுஏஇ.,ல் golden visa பெறுவதற்கு work contract மாற்றம் செய்ய வேண்டுமா ?

துபாயில் உள்ள கம்பெனி ஒன்றில் work permit மூலமாக வேலை செய்யும் ஒருவர் golden visa எனப்படும் நிரந்த குடியுரிமையை பெற வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகள், சட்டதிட்டங்கள் உள்ளன. யுஏஇ.,ல் சொத்து வாங்கினால் மட்டும் golden visa பெற்று விட முடியாது. சொத்துக்கள் அல்லது தொழில்களில் முதலீடு செய்பவர்களும் golden visa பெற்று விட முடியாது.

யுஏஇ.,ல் golden visa பெற வேண்டும் என்றால் அவர் யுஏஇ.,ல் வேலைவாய்ப்பை பெற்றிருக்க வேண்டும். golden residency visa பெற விரும்பினால், முதலில் அது பற்றி தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் முதலில் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே அவர்கள் பெற்ற work permit ஐ ரத்து செய்தால் மட்டுமே golden visa பெற முடியும்.

அதனால் என்ன காரணத்திற்காக work permit ஐ ரத்து செய்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு அந்த நிறுவனத்திடம் எழுத்து பூர்வமாக தெரிவித்து, அந்த நிறுவனத்திடம் இருந்து அதற்கான கடிதத்தையும் பெற வேண்டும். அதற்கு பிறகே golden visa விற்கு விண்ணப்பிக்க முடியும். முறைப்படி மனிதவள அமைச்சகத்திற்கு work permit ரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். அதற்கு தேவையான ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும்.

ஒருமுறை golden visa பெற்ற தொழிலாளரின் work permit ரத்து செய்யப்பட்டால், அவர் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புதிய வேலைவாய்ப்பு கான்ட்ராக்ட் பெற வேண்டும். ஒப்பந்தம் மாற்றப்பட்டதையும் மனிதவள அமைச்சகத்திடம் தெரிவித்து, அதற்கான சான்றிதழை பெற வேண்டும். இந்த சான்றிதழை பெறுவதற்கு அவர்கள் பெற்றிருக்கும் திறனுக்கு ஏற்ப கல்வி தகுதியும், ஆவணங்களும் பெற்றிருக்க வேண்டும்.

 • Related Posts

  யுஏஇ.,யில் புதிய மத்திய போக்குவரத்து சட்டம் அறிமுகம்

  புதிய மத்திய போக்குவரத்து சட்டத்தை கொண்டு வர யுஏஇ அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. யுஏஇ பிரதமரும், துணை அதிபரும், துபாய் அரசருமான ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்டோனம் இதனை தெரிவித்துள்ளார். புதிதாக கொண்டு வரப்பட உள்ள போக்குவரத்து…

  Read more
  துபாயில் 17,000 திஹ்ரான் வரை சலுகை தரும் Nol card

  துபாயில் புதிதாக போக்குவரத்திற்கான Nol card அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள், குடியிருப்பு வாசிகள், குடிமக்கள் ஆகியோரை கவருவதற்காக பல்வேறு தயாரிப்புகள், சேவைகளை பயன்படுத்த 17,000 திஹ்ரான் வரை சலுகை தர உள்ளது. Roads and Transport Authority (RTA)…

  Read more

  You Missed

  யுஏஇ.,யில் புதிய மத்திய போக்குவரத்து சட்டம் அறிமுகம்

  • June 10, 2024
  யுஏஇ.,யில் புதிய மத்திய போக்குவரத்து சட்டம் அறிமுகம்

  துபாயில் 17,000 திஹ்ரான் வரை சலுகை தரும் Nol card

  • June 10, 2024
  துபாயில் 17,000 திஹ்ரான் வரை சலுகை தரும் Nol card

  கருக்கலைப்பிற்கான விதிமுறைகளை வெளியிட்டது யுஏஇ அரசு

  • June 9, 2024
  கருக்கலைப்பிற்கான விதிமுறைகளை வெளியிட்டது யுஏஇ அரசு

  Nol card ஐ மறந்துட்டீங்களா? இனி கவலை வேண்டாம்…இதோ வழி இருக்கு

  • June 9, 2024
  Nol card ஐ மறந்துட்டீங்களா? இனி கவலை வேண்டாம்…இதோ வழி இருக்கு

  சுகாதாரமற்ற உணவு : அபுதாபியில் பிரபல உணவகம் மூடல்

  • June 8, 2024
  சுகாதாரமற்ற உணவு : அபுதாபியில் பிரபல உணவகம் மூடல்

  யுஏஇ.,யில் மீண்டும் மழை…அச்சத்தில் மக்கள்

  • June 6, 2024
  யுஏஇ.,யில் மீண்டும் மழை…அச்சத்தில் மக்கள்
  Optimized with PageSpeed Ninja