Nol card ஐ மறந்துட்டீங்களா? இனி கவலை வேண்டாம்…இதோ வழி இருக்கு

Nol card ஐ வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்று மெட்ரோ வாசலில் குழப்பத்துடன் நிற்பவர்களுக்கு இதோ சூப்பரான வழி.

நாம் வீட்டில் இருந்து புறப்படும் போது எதை மறந்தால், கண்டிப்பாக மொபைல் போனை மறக்காமல் எடுத்துச் செல்வோம். இனி மெட்ரோவில் பயணம் செய்வதற்கு மொபைல் போன் மட்டும் கையில் இருந்தாலே போதும். அதிலும் நீங்கள் சாம்சங் மொபைல் பயன்படுத்துபவராக இருந்தால் எளிதில் உங்களின் Nol card ஐ டிஜிட்டலில் வைத்துக் கொள்ளலாம். அதோடு மெட்ரோ பயணத்திற்கான கட்டணத்தையும் மொபைல் வழியாகவே செலுத்தி விடலாம்.

Nol card என்பது துபாயில் சாலை போக்குவரத்தில் பயணம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் கார்டு ஆகும். துபாயை பொருத்தவரை மெட்ரோவில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை பணமாக செலுத்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதற்கு பதிலாக Nol card என்ற கார்டு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நாம் பயணம் செய்வதற்கான கட்டணத்தை இதில் ரீசார்ஜ் செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

Roads and Transport Authority (RTA) மற்றும் Samsung Gulf Electronics ஆகியவை இணைந்து இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன. அதன் படி, இனி மொபைலிலேயே Nol card ஐ வைத்துக் கொள்ளலாம். அதற்கு இந்த 6 விஷயங்களை செய்தாலே போதும்.

Nol cardஐ டிஜிட்டல் ஆக்க செய்ய வேண்டிய 6 விஷயங்கள் :

1. முதலில் Nol card ஆப்பினை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்.

2. பிறகு login செய்து, இந்த ஆப்பை உங்களின் UAE Pass ஆப் உடன் இணைக்க வேண்டும். மிக எளிதாக இதை செய்து விடலாம்.

3. இப்போது get my Nol card என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. உடனடியாக நீங்கள் உங்களின் Nol card ஐ டிஜிட்டலில் பெற்றுக் கொள்வதற்கான முறை திரையில் காட்டப்படும். ஆனால் அந்த சமயத்தில் Nol card உங்களின் கையில் இருப்பது அவசியம்.

5. போனிலேயே உங்களின் Nol card ஐ வைத்துக் கொள்வதற்கான வழிகள் காட்டப்படும். அது உறுதி செய்யப்படும் வரை உங்களின் Nol card ஐ கையிலேயே வைத்திருக்க வேண்டும்.

6. அது முடிந்ததும் Nol card ஐ உங்களின் போனின் பின்புறம் இருந்து அகற்றி விடலாம் என்ற அறிவிப்பு வரும். சில நிமிடங்களிலேயே உங்களின் கார்டினை டிஜிட்டல் செய்து விடலாம்.

ஆனால் உங்களின் Nol card ஐ டிஜிட்டலுக்கு மாற்றி விட்டால் நீங்கள் கையில் வைத்திருக்கும் உங்களின் Nol card காலாவதி ஆகி விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்

  • Anu

    அனு என்பது UAE Tamil Web-இன் ஆசிரியர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எடிட்டோரியல் அடையாளம். ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கான செய்திகள், வேலைவாய்ப்புகள், சமூக நிகழ்வுகள், பயண தகவல்கள் மற்றும் பயனுள்ள வழிகாட்டி கட்டுரைகளை எளிமையான தமிழில் தொகுத்து வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார். UAE மற்றும் உலகளாவிய தமிழ் சமூகத்திற்கு நம்பகமான, விரைவான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்குவது UAE Tamil Web-இன் முக்கிய நோக்கமாகும்.

    Related Posts

    வானத்தையே வளைத்த துபாயின் ‘மகுடம்’: வெறும் கான்கிரீட் காடா, இல்லை மனித சாத்தியத்தின் எல்லையா?

    புர்ஜ் கலீஃபா: பாலைவனத்தின் மத்தியில் வானத்தைத் தொட்ட மனித சாதனை ஒரு நாட்டை நினைத்தவுடன் சில அடையாளங்கள் நம் மனதில் உடனே தோன்றிவிடும். இந்தியா என்றால் தாஜ்மஹால், பிரான்ஸ் என்றால் ஐஃபெல் கோபுரம், அமெரிக்கா என்றால் ஸ்டாச்யூ ஆஃப் லிபர்ட்டி. அதுபோலவே,…

    Read more

    200 கி.மீ வேகம், 7 அமீரகங்கள்: யு.ஏ.இ-யை மாற்றும் எதிஹாத் ரயில் புரட்சி!

    எதிஹாத் ரயில்: ஐக்கிய அரபு அமீரகத்தின் அடுத்த வளர்ச்சி அத்தியாயத்தை எழுதும் தேசிய ரயில்வே புரட்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது பெரும்பாலானோரின் நினைவுக்கு முதலில் வருவது உலகின் உயரமான கட்டிடங்கள், அதிநவீன விமான நிலையங்கள், செயற்கைத் தீவுகள்,…

    Read more

    You Missed

    வானத்தையே வளைத்த துபாயின் ‘மகுடம்’: வெறும் கான்கிரீட் காடா, இல்லை மனித சாத்தியத்தின் எல்லையா?

    • July 15, 2026
    வானத்தையே வளைத்த துபாயின் ‘மகுடம்’: வெறும் கான்கிரீட் காடா, இல்லை மனித சாத்தியத்தின் எல்லையா?

    200 கி.மீ வேகம், 7 அமீரகங்கள்: யு.ஏ.இ-யை மாற்றும் எதிஹாத் ரயில் புரட்சி!

    • July 10, 2026
    200 கி.மீ வேகம், 7 அமீரகங்கள்: யு.ஏ.இ-யை மாற்றும் எதிஹாத் ரயில் புரட்சி!

    துபாயின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குப் பின்னால் என்ன? உலகை வியக்க வைக்கும் அமீரகத்தின் 7 பாரம்பரிய ரகசியங்கள்!

    • July 10, 2026
    துபாயின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குப் பின்னால் என்ன? உலகை வியக்க வைக்கும் அமீரகத்தின் 7 பாரம்பரிய ரகசியங்கள்!

    ஸ்மார்ட் துபாயில் ஸ்மார்ட்டாக கார் ஓட்டுவது எப்படி? ‘சாலிக்’ டோல்கேட்டில் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த சூப்பர் டிப்ஸ்!

    • July 8, 2026
    ஸ்மார்ட் துபாயில் ஸ்மார்ட்டாக கார் ஓட்டுவது எப்படி? ‘சாலிக்’ டோல்கேட்டில் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த சூப்பர் டிப்ஸ்!

    துபாயில் IT வேலை தேடுறீங்களா? இல்லை… அடுத்த பெரிய வாய்ப்பை உருவாக்கப் போறீங்களா?

    • June 30, 2026
    துபாயில் IT வேலை தேடுறீங்களா? இல்லை… அடுத்த பெரிய வாய்ப்பை உருவாக்கப் போறீங்களா?

    Google பண்ணு தெரியும்… அது என்ன ‘Dubai-it’? ஒரு நகரத்தின் பெயர் Verb-ஆக மாறிய ஆச்சரியக் கதை!

    • June 30, 2026
    Google பண்ணு தெரியும்… அது என்ன ‘Dubai-it’? ஒரு நகரத்தின் பெயர் Verb-ஆக மாறிய ஆச்சரியக் கதை!