அபுதாபியில் உணவு பாதுகாப்பு தரக் கட்டுப்பாடுகளை மீறி, சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த பிரபல உணவகம் மூடப்பட்டுள்ளது.
அபுதாபியில் செயல்பட்டு வந்த பிரபல உணவகமான Desi Pak Punjab Restaurant ல் சாப்பிடுவதற்கான உணவு தயாரிக்கும் இடத்தில் பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் அந்த சமையலறை இயங்கி வந்ததும் தெரிய வந்தது. அது மட்டுமின்றி போதிய பாதுகாப்பு, காற்றோட்டம் இல்லாமலும் இயங்கி வந்தததால் அந்த உணவகத்தை மூட அபுதாபி விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு கழகம் பரிந்துரை செய்துள்ளது.
Desi Pak Punjab Restaurant உணவகம் இதற்கு முன்பும் பலமுறை எச்சரிக்கை வழங்கப்பட்டும் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்துள்ளது. உணவு பாதுகாப்பு பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படும் வரை இந்த உணவகம் திறக்கப்படக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அது மட்டுமின்றி உணவு பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை இருந்தால் 800555 என்ற ஹாட்லைன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் படி பொது மக்களையும் அபுதாபி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்