மேலும் 3 நாட்டினருக்கு இ விசா வழங்க சவுதி அரேபியா முடிவு

புதிதாக மேலும் 3 நாட்டு குடிமக்களுக்கு இ விசா வழங்க முடிவு செய்திருப்பதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியா வருவதற்கு இ விசா பெற தகுதியான நாட்டினர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

பார்படாஸ், காம்ன்வெல்த் ஆஃப் தி பஹாமாஸ் மற்றும் கிரேனடா ஆகிய நாடுகளை சேர்ந்த குடி மக்களுக்கு தான் தற்போது இ விசா வழங்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த 3 நாடுகளுடன் அமெரிக்கா, ஐரோப்பா ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு ஷெங்கன் பகுதி விசா வைத்திருப்பவர்களுக்கும் சுற்றுலா விசா காலத்தை நீட்டிக்கும் சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் GCC நாடுகளில் வசிப்பவர்கள், சுற்றுலா பயணிகள், உம்ரா யாத்திரை வருபவர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்க உள்ளிட்ட நோக்கங்களுக்கு வருபவர்களும் இந்த இ விசா பெறுவதற்கு தகுதியானவர்கள் என சொல்லப்படுகிறது.

சவுதி மற்றும் ஃபிளைனாஸ் ஏர்லைன்ஸ் மூலம் சவுதி அரேபியா வருபவர்களுக்கு டிரான்சிட் விசாக்களை அறிமுகம் செய்யவும் சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இவர்கள் தங்களின் பயணத்தை துவங்குவதற்கு முன் 96 மணி நேரம் ஐக்கிய அரசு அமீரகத்தில் தங்க அனுமதிக்கிறது. சவுதி அரேபியாவின் சுற்றலா சலுகைகளை விரிவுபடுத்தவும், கலாச்சார தலங்களை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் சர்வதேச தொடர்புகளை விரிவுபடுத்தவும் இந்த புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

  • Related Posts

    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    Dubai: துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஜுமேரா ஜாகிங் ட்ராக் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் நோக்கில் ஹை ஹீல்ஸ் அணிவதை தடை செய்துள்ளது. 7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ட்ராக் நடப்பவர்கள் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்களிடையே…

    Read more

    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    இந்த செய்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பயன்படுத்துபவர்களுக்கு முக்கியமானது. தங்கள் ஸ்மார்ட்போன்கள் இனி வாட்ஸ்அப்பை ஆதரிக்காது என்பதை அறிந்து, புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிடலாம். 2025 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி முதல், iOS 15.1…

    Read more

    You Missed

    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    • January 4, 2025
    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    • January 2, 2025
    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து….. இந்திய இளம் மருத்துவரின் கனவு நொறுங்கியது!!!

    • January 1, 2025
    புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து….. இந்திய இளம் மருத்துவரின் கனவு நொறுங்கியது!!!

    பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம்: புத்தாண்டில் துபாயின் புதிய தொடக்கம்

    • January 1, 2025
    பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம்: புத்தாண்டில் துபாயின் புதிய தொடக்கம்

    உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு UAE விசா விண்ணப்பிக்க வேண்டுமா? வீட்டிலிருந்தே எளிதாக விண்ணப்பிக்கலாம்!

    • December 30, 2024
    உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு UAE விசா விண்ணப்பிக்க வேண்டுமா? வீட்டிலிருந்தே எளிதாக விண்ணப்பிக்கலாம்!

    UAE: சர்வதேச எண்ணெய் விலை நிலைமையால் ஜனவரி-இல் பெட்ரோல் விலை அதிரடியாக குறையும்!!

    • December 30, 2024
    UAE: சர்வதேச எண்ணெய் விலை நிலைமையால் ஜனவரி-இல்  பெட்ரோல் விலை அதிரடியாக குறையும்!!