துபாயில் 17,000 திஹ்ரான் வரை சலுகை தரும் Nol card

துபாயில் புதிதாக போக்குவரத்திற்கான Nol card அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள், குடியிருப்பு வாசிகள், குடிமக்கள் ஆகியோரை கவருவதற்காக பல்வேறு தயாரிப்புகள், சேவைகளை பயன்படுத்த 17,000 திஹ்ரான் வரை சலுகை தர உள்ளது.

Roads and Transport Authority (RTA) வெளியிட்டுள்ள தகவலின் படி, Nol Travel Card வைத்திருப்பவர்கள் பொது போக்குவரத்து, பார்க்கிங், மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் துபாயில் ஆகும் செலவு ஆகியவற்றிற்கு இந்த கார்டினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த புதிய கார்டுகள் ஓட்டல்கள், கடைகள், பொழுது போக்கு விஷயங்கள் உள்ளிட்டவைகளுக்கு 5 முதல் 10 சதவீதம் சலுகை வழங்கும்.

இதற்கு முன்பு வரை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கிடைக்கும் Nol Travel Card களை Zoom and Europcard போன்ற சில பார்ட்னர் கடைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த கார்டின் ஆரம்ப விலை 200 திஹ்ரான். ஒரு ஆண்டு வரை பயன்படுத்தக் கூடிய இந்த கார்டில் 19 திஹ்ரான் பேலன்ஸ் இருக்கும். ஆண்டு இறுதியில் 150 திஹ்ரான் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஏற்கனவே Nol card பயன்படுத்துபவர்கள் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Nol Travel card ஐ தற்போது பயன்படுத்த முடியாது. ஆனால் இது தொடர்பாக வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும் என Roads and Transport Authority (RTA) தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் உள்ளிட்டவர்கள் நகரின் வசதிகளை பெற வேண்டும் என்பதற்காகவே அறிமுகம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்

  • Related Posts

    யுஏஇ.,யில் புதிய மத்திய போக்குவரத்து சட்டம் அறிமுகம்

    புதிய மத்திய போக்குவரத்து சட்டத்தை கொண்டு வர யுஏஇ அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. யுஏஇ பிரதமரும், துணை அதிபரும், துபாய் அரசருமான ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்டோனம் இதனை தெரிவித்துள்ளார். புதிதாக கொண்டு வரப்பட உள்ள போக்குவரத்து…

    Read more
    கருக்கலைப்பிற்கான விதிமுறைகளை வெளியிட்டது யுஏஇ அரசு

    கருக்கலைப்பு செய்வதற்கான ஒழுங்குமுறை வழிகாட்டு நெறிமுறைகளை யுஏஇ சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இனி இந்த முறைகளை பின்பற்றியே கருக்கலைப்புகள் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை பாதுகாத்தல், அவரின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நாட்டில்…

    Read more

    You Missed

    யுஏஇ.,யில் புதிய மத்திய போக்குவரத்து சட்டம் அறிமுகம்

    • June 10, 2024
    யுஏஇ.,யில் புதிய மத்திய போக்குவரத்து சட்டம் அறிமுகம்

    துபாயில் 17,000 திஹ்ரான் வரை சலுகை தரும் Nol card

    • June 10, 2024
    துபாயில் 17,000 திஹ்ரான் வரை சலுகை தரும் Nol card

    கருக்கலைப்பிற்கான விதிமுறைகளை வெளியிட்டது யுஏஇ அரசு

    • June 9, 2024
    கருக்கலைப்பிற்கான விதிமுறைகளை வெளியிட்டது யுஏஇ அரசு

    Nol card ஐ மறந்துட்டீங்களா? இனி கவலை வேண்டாம்…இதோ வழி இருக்கு

    • June 9, 2024
    Nol card ஐ மறந்துட்டீங்களா? இனி கவலை வேண்டாம்…இதோ வழி இருக்கு

    சுகாதாரமற்ற உணவு : அபுதாபியில் பிரபல உணவகம் மூடல்

    • June 8, 2024
    சுகாதாரமற்ற உணவு : அபுதாபியில் பிரபல உணவகம் மூடல்

    யுஏஇ.,யில் மீண்டும் மழை…அச்சத்தில் மக்கள்

    • June 6, 2024
    யுஏஇ.,யில் மீண்டும் மழை…அச்சத்தில் மக்கள்
    Optimized with PageSpeed Ninja