துபாயில் 3 நாட்கள் சூப்பர் சேல் மேளா துவங்க உள்ளது. இந்த வார இறுதியில் 500 க்கும் அதிகமான பிராண்ட் பொருட்கள் 90 சதவீதம் வரை ஆஃபருடன் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த 3 நாள் சூப்பர் சேல்(3DSS)மே 31ம் தேதி துவங்கி, ஜூன் 02ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2000 க்கும் மேற்பட்ட பொருட்கள் சலுகை விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஃபேஷன், பியூட்டி, எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியன துபாய் முழுவதிலும் உள்ள மால்கள், ஷாப்பிங் மையங்கள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்பட உள்ளது.
Dubai Festivals and Retail Establishment (DFRE) இது பற்றி கூறுகையில், கோடை கால ஆஃபராக மக்களுக்காக இந்த 3 நாட்கள் சூப்பர் சேல் மேளா நடத்தப்பட உள்ளது. ஈத் அல் அதாவிற்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த ஆஃபர் ஷாப்பிங் இஸ்லாமிய திருவிழா கொண்டாட்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். ஈத் அல் அதா, ஜூன் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அதற்கு முன் புதிய ஆடைகள், பரிசுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு வசதியாக இருக்கும் வகையில் இந்த சூப்பர் சேல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடைகள், காலணிகள், எலக்ட்ரானிக் சாதனங்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. IKEA, Homes R Us, Watsons, FACES, Nine West, Hour Choice, Damas, Swarovski, Tommy Hilfiger, Marks & Spencer, Debenhams, H&M உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் பிராண்டகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்