
தொடர்ந்து hair-straightening முறைகளை மேற்கொண்டால் அதனால் தோல் அரிப்பு போன்ற சாதாரண பிரச்சனைகள் முதல் சிறுநீரகம் தொடர்பு வரையிலான பெரிய பிரச்சனைகள் வரை ஏற்படும் என யுஏஇ டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய ஆய்வுகளின் படி தலை முடிகளுக்கான கெராடின் சிகிச்சைகளை மேற்கொள்பவர்களுக்கு ஆபத்தை விளைக்க கூடிய பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கும் டாக்டர்கள், யுஏஇ.,ல் இதுவரை அதுபோன்ற ஆபத்தான பிரச்சனைகள் யாருக்கும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
The New England Journal of Medicine வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு கட்டுரையின் படி, சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பரிசோதித்ததில் அவர் சலூனின் தொடர்ந்து hair-straightening முறையை கையாண்டு வந்தது தெரிய வந்துள்ளது. hair-straightening மற்றும் hair dye க்கும் பல்வேறு கெமிக்கல்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த கெமிக்கல்கள் சாதாரணமாகவே பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. அனைவருக்கும் தெரிந்த பொதுவாக பக்க விளைவு என்றால் அது தோல் அரிப்பு அல்லது ஒவ்வாமை தான்.
சில அரிதான நிகழ்வுகளில், இந்த கெமிக்கல்கள் சிறிது ரத்தநாளங்களால் உறிஞ்சப்படும் போது ஒவ்வாமை ஏற்பட்டு சீறுநீரக நாளங்களில் பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும். இதனால் சிறுநீரகம் செயலிழந்து சில சமயங்களில் டயாலிசிஸ் செய்யும் ஆபத்தான நிலைக்கு தள்ளி விடுகிறது. ஆரம்ப நிலையிலேயே இவற்றை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் போது இவற்றில் இருந்து விடுபட்டு, முழுமையாக குணமடைய முடியும்.
இது போன்ற கெமிக்கல்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு உடல் பலவீனம், மூட்டு வலி, தோல்களில் அரிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைவது உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் ஆரம்பத்திலேயே நன்கு பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தியானம், டயாலிசிஸ் உள்ளிட்டவை கண்டிப்பாக தேவைப்படுகிறது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.