என்னது…hair-straightening செய்தால் சிறுநீரக பிரச்சனை வருமா?

தொடர்ந்து hair-straightening முறைகளை மேற்கொண்டால் அதனால் தோல் அரிப்பு போன்ற சாதாரண பிரச்சனைகள் முதல் சிறுநீரகம் தொடர்பு வரையிலான பெரிய பிரச்சனைகள் வரை ஏற்படும் என யுஏஇ டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

சமீபத்திய ஆய்வுகளின் படி தலை முடிகளுக்கான கெராடின் சிகிச்சைகளை மேற்கொள்பவர்களுக்கு ஆபத்தை விளைக்க கூடிய பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கும் டாக்டர்கள், யுஏஇ.,ல் இதுவரை அதுபோன்ற ஆபத்தான பிரச்சனைகள் யாருக்கும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

The New England Journal of Medicine வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு கட்டுரையின் படி, சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பரிசோதித்ததில் அவர் சலூனின் தொடர்ந்து hair-straightening முறையை கையாண்டு வந்தது தெரிய வந்துள்ளது. hair-straightening மற்றும் hair dye க்கும் பல்வேறு கெமிக்கல்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த கெமிக்கல்கள் சாதாரணமாகவே பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. அனைவருக்கும் தெரிந்த பொதுவாக பக்க விளைவு என்றால் அது தோல் அரிப்பு அல்லது ஒவ்வாமை தான்.

சில அரிதான நிகழ்வுகளில், இந்த கெமிக்கல்கள் சிறிது ரத்தநாளங்களால் உறிஞ்சப்படும் போது ஒவ்வாமை ஏற்பட்டு சீறுநீரக நாளங்களில் பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும். இதனால் சிறுநீரகம் செயலிழந்து சில சமயங்களில் டயாலிசிஸ் செய்யும் ஆபத்தான நிலைக்கு தள்ளி விடுகிறது. ஆரம்ப நிலையிலேயே இவற்றை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் போது இவற்றில் இருந்து விடுபட்டு, முழுமையாக குணமடைய முடியும்.

இது போன்ற கெமிக்கல்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு உடல் பலவீனம், மூட்டு வலி, தோல்களில் அரிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைவது உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் ஆரம்பத்திலேயே நன்கு பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தியானம், டயாலிசிஸ் உள்ளிட்டவை கண்டிப்பாக தேவைப்படுகிறது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

  • Related Posts

    Nol card ஐ மறந்துட்டீங்களா? இனி கவலை வேண்டாம்…இதோ வழி இருக்கு

    Nol card ஐ வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்று மெட்ரோ வாசலில் குழப்பத்துடன் நிற்பவர்களுக்கு இதோ சூப்பரான வழி. நாம் வீட்டில் இருந்து புறப்படும் போது எதை மறந்தால், கண்டிப்பாக மொபைல் போனை மறக்காமல் எடுத்துச் செல்வோம். இனி மெட்ரோவில்…

    Read more
    யுஏஇ புதிய கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்

    ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய கோல்டன் விமா திட்டம், சில வகையான வெளிநாட்டினருக்கு ஸ்பான்சர் தேவையில்லாமலேயே நீண்ட காலம் வசிப்பதற்கு வழி வகை செய்கிறது. எமிரேட்ஸில் திறமையான நபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற முக்கிய பங்களிப்பாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் இந்த திட்டம்…

    Read more

    You Missed

    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    • January 4, 2025
    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    • January 2, 2025
    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து….. இந்திய இளம் மருத்துவரின் கனவு நொறுங்கியது!!!

    • January 1, 2025
    புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து….. இந்திய இளம் மருத்துவரின் கனவு நொறுங்கியது!!!

    பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம்: புத்தாண்டில் துபாயின் புதிய தொடக்கம்

    • January 1, 2025
    பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம்: புத்தாண்டில் துபாயின் புதிய தொடக்கம்
    Optimized with PageSpeed Ninja