கருக்கலைப்பு செய்வதற்கான ஒழுங்குமுறை வழிகாட்டு நெறிமுறைகளை யுஏஇ சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இனி இந்த முறைகளை பின்பற்றியே கருக்கலைப்புகள் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை பாதுகாத்தல், அவரின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நாட்டில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றையே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. தெளிவான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் கீழ் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
கருக்கலைப்பு தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்கு ஒவ்வொரு சுகாதார ஆணையத்திலும் ஒரு குழு அமைக்கப்படும் UAE’s Ministry of Health and Prevention (Mohap) அறிவித்துள்ளது. அனைத்து கருக்கலைப்புகளும் முறையாக வசதிகளுடன், உரிமம் பெற்ற மருத்துவரால் மட்டுமே செய்யப்பட வேண்டும். கருக்கலைப்பு முறையால் எந்த மருத்துவ ரீதியிலான பிரச்சனையும் ஏற்பட்டு விடக் கூடாது. அதிலும் குறிப்பான கர்ப்பிணி பெண்ணின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாது. கருக்கலைப்பு செய்யும் போது பெண்ணின் கர்ப்ப நாட்கள் 120 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்