சுகாதாரமற்ற உணவு : அபுதாபியில் பிரபல உணவகம் மூடல்

அபுதாபியில் உணவு பாதுகாப்பு தரக் கட்டுப்பாடுகளை மீறி, சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த பிரபல உணவகம் மூடப்பட்டுள்ளது.

அபுதாபியில் செயல்பட்டு வந்த பிரபல உணவகமான Desi Pak Punjab Restaurant ல் சாப்பிடுவதற்கான உணவு தயாரிக்கும் இடத்தில் பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் அந்த சமையலறை இயங்கி வந்ததும் தெரிய வந்தது. அது மட்டுமின்றி போதிய பாதுகாப்பு, காற்றோட்டம் இல்லாமலும் இயங்கி வந்தததால் அந்த உணவகத்தை மூட அபுதாபி விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு கழகம் பரிந்துரை செய்துள்ளது.

Desi Pak Punjab Restaurant உணவகம் இதற்கு முன்பும் பலமுறை எச்சரிக்கை வழங்கப்பட்டும் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்துள்ளது. உணவு பாதுகாப்பு பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படும் வரை இந்த உணவகம் திறக்கப்படக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அது மட்டுமின்றி உணவு பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை இருந்தால் 800555 என்ற ஹாட்லைன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் படி பொது மக்களையும் அபுதாபி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்

  • Anu

    Related Posts

    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    Dubai: துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஜுமேரா ஜாகிங் ட்ராக் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் நோக்கில் ஹை ஹீல்ஸ் அணிவதை தடை செய்துள்ளது. 7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ட்ராக் நடப்பவர்கள் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்களிடையே…

    Read more

    UAE: சர்வதேச எண்ணெய் விலை நிலைமையால் ஜனவரி-இல் பெட்ரோல் விலை அதிரடியாக குறையும்!!

    2025 ஜனவரிக்கு விலை திருத்தம் செய்யப்படும் போது, UAE இல் பெட்ரோல் விலைகள் சிறிய அளவில் குறையக்கூடும். டிசம்பர் 2024 இல் பிரண்ட் கிரூட் எண்ணெய் ஒரு பேரல் $73.06 ஆக சராசரியாக இருந்தது, இது நவம்பரில் $73.2 உடன் ஒப்பிடுகையில்…

    Read more

    You Missed

    D33: அடுத்த 10 ஆண்டுகளில் துபாயை உலகின் Top 3 நகரங்களில் ஒன்றாக மாற்றும் மாஸ்டர் பிளான்!

    • June 10, 2026
    D33: அடுத்த 10 ஆண்டுகளில் துபாயை உலகின் Top 3 நகரங்களில் ஒன்றாக மாற்றும் மாஸ்டர் பிளான்!

    துபாயின் புதிய அடையாளம்: AI செஃப் உருவாக்கும் மெனு… மனிதர்கள் சமைக்கும் ஹோட்டல்!

    • July 17, 2025

    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    • January 4, 2025
    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    • January 2, 2025
    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து….. இந்திய இளம் மருத்துவரின் கனவு நொறுங்கியது!!!

    • January 1, 2025
    புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து….. இந்திய இளம் மருத்துவரின் கனவு நொறுங்கியது!!!

    பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம்: புத்தாண்டில் துபாயின் புதிய தொடக்கம்

    • January 1, 2025
    பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம்: புத்தாண்டில் துபாயின் புதிய தொடக்கம்