பொது கழிவறையை பயன்படுத்துவது என்றாலே கிருமிகள் தொற்று, நோய் அபாயம் ஆகியவை ஏற்படும் என்ற பயத்தால் பலரும் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கும் நிலை அனைத்து நாட்டிலும் உள்ளது. இந்த பிரச்சனைக்கு குறைந்த விலையிலேயே ஒரு சூப்பரான தீர்வை துபாய் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
துபாய் கனாடியன் பல்கலைகழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் குழு, எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான பிளாஸ்டிக் சீட் கவர்களை உருவாக்கி உள்ளனர். இதனால் நீங்கள் பொது கழிவறையின் இருக்கைகளை தொட வேண்டிய அவசியமே கிடையாது. இந்த சீட்டின் விலை வெறும் 10 திஹ்ரான்கள் மட்டுமே.
பொதுக் கழிவறைகளில் கிருமிகள், பாக்டீரியாக்கள் இருக்கும் என பயன்படுப்படுபவர்களுக்காக பிரத்யேகமாக இதை வடிவமைத்துள்ளனர். நீங்கள் பொது கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த டாலட் பேப்பர்களை விரிப்பை போல் பயன்படுத்தி, டாலட் சீட்டின் மீது போட்டு, பிறகு கழிவறையை பயன்படுத்தலாம். இதனால் இனி போகும் இடமெல்லாம் வைப்ஸ் அல்லது ஸ்பிரே ஆகியவற்றை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு மாணவர்கள் ‘SafeSeat’ என பெயரிட்டுள்ளனர். இது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது கிடையாது தான். loophole லில் இருந்து தான் இதை மாணவர்கள் தயாரித்துள்ளது. கிருமி தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் இதை அவர்கள் வடிவமைத்துள்ளனர். SafeSeat 50 சீட்கள் கொண்ட ஒரு ரோலாக விற்கப்பட உள்ளன. பயோ டிகிரேடபிள் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தியே இந்த SafeSeat தயாரிக்கப்பட்டுள்ளதால் இது சுற்றுச் சூழலுக்கும் தீங்கு விளைவிக்காததாகும். இதை பயன்படுத்திய பிறகு டாலலெட்களில் போட்டு ஃபிளஷ் செய்து விடலாம் என சொல்லப்படுகிறது.
இதில் கெமிக்கல் எதுவும் சேர்க்கப்படாததால் ஒவ்வாமை, தோல் ஆபத்துக்கள், அரிப்பு போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாது என சொல்லப்படுகிறது. இது சிறுநீரக தொற்றுக்களை தடுக்கும் என்பதால் பலரிடமும் இது வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தயாரிப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சொல்லப்படுகிறது.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்