துபாயில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மே 19ம் தேதி முதல் மீண்டும் திறுக்கப்படுவதாக துபாய் சாலைகள் மற்றுமண போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. Onpassive, Equiti, and Mashreq ஆகிய ரயில் நிலையங்கள் மெ 19ம் தேதி முதல் மீண்டும் செயல்பட துவங்கி உள்ளன. அதே சமயம் The Energy Metro Station சேவைகள் அடுத்த வாரம் முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் ஏப்ரல் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக மெட்ரோல் ரயில் நிலையங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மெட்ரோ நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஏப்ரல் 16ம் தேதி யுஏஇ.,யை தாக்கிய கடும் புயலால் மொத்தமாக மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டது. 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த புயல், மழை, வெள்ள பாதிப்பில் இருந்து யுஏஇ இன்னும் முழுவதுமாக மீண்டு வரவில்லை என்றே சொல்லலாம்.
மூடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் நிலையங்களின் சேவைகள் மே 28ம் தேதி முதல் மீண்டும் துவங்கும் என RTA ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததாக மெட்ரோ நிலையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடைபாதை கதவுகள், லிஃப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் சரி செய்யப்பட்டு, மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.
மெட்ரோ நிலையங்களுக்கு பஸ் சேவைகளும் துவங்கப்பட உள்ளதாக RTA தெரிவித்துள்ளது. பயணிகள் வசதிகள், துபாய் முழுவதும் எளிதில் பயணிப்பதற்கான சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக RTA தெரிவித்துள்ளது
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்