யுஏஇ வரலாற்றிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் குடிமக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் கடந்துள்ளது அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ம் ஆண்டு Nafis employment programme என்ற திட்டத்தை அதிபர் ஷேக் முகம்மது துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தனியார் கம்பெனிகளில் 70,000 அமீரக பாதுகாப்பான வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த திட்டத்திற்காக துணை அதிபரும், யுஏஇ பிரதமருமான ஷேக் முகம்மது24 பில்லியன் திஹ்ரானை ஒதுக்கினார். தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, ஆதரவு அளித்ததால் நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த மாதத்தின் துவக்கத்தில் யுஏஇ அமைச்சரவை அறிவித்துள்ள புதிய முடிவின் படி, தனியார் துறை கம்பெனிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள அமீரக விண்ணப்பதாரர்களுக்கு ஃபெடரல் அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் துறைகளில் வேலை பார்த்த அனுபவமும் ஃபெடரல் அரசு பணிக்கான கூடுதல் தகுதியாக சேர்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் உருவாக்கப்பட்டு வருவது நாட்டின் பொருளாதாரத்திற்கு துணையாக உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் அமீரக மக்களுக்காக புதியதாக கூடுதலாக ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதே லட்சியம் என ஷேக் முகம்மது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Nafis employment programme என்பது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சதவீதம் என்ற அடிப்படையில் 2026ம் ஆண்டிற்குள் அமீரக வேலைவாய்ப்பு திறன் குறைந்தபட்சம் 10 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் என்பதாகும். இந்த இலக்கை அடைய தவறினால் ஒவ்வொரு கம்பெனியும் முதல் ஆறு மாதங்களில் 48,000 திஹ்ரான் அபராதமாக செலுத்த வேண்டும். அதாவது, ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 8000 திஹ்ரான் என்ற அடிப்படையில் செலுத்த வேண்டும். மாதாந்திர அபராத தொகை ஒவ்வொரு ஆண்டும் 1000 திஹ்ரான் அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையிலான யுஏஇ நாட்டினரை தங்களின் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்த தவறினால் அபராதம் விதிக்கப்படும்.
கம்பெனிகள் இவற்றை செய்துள்ளனவா என குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. 2022ம் ஆண்டு மத்தியில் இருந்து இந்த ஆண்டு மே 16ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 1300க்கும் அதிகமான கம்பெனிகள் இந்த விதிகளை மீறி உள்நாட்டினருக்கு பதிலாக வெளிநாட்டினர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது தெரிய வந்துள்ளது. அதே சமயம் 2021 செப்டம்பர் வரை தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 170 சதவீதம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்