யுஏஇ.,யில் இயங்கி வரும் 1300 க்கும் அதிகமான தனியார் கம்பெனிகள் குடியேற்ற விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டு மத்தியில் இருந்து 2024ம் ஆண்டு மே 16ம் தேதி வரை இந்த விதி மீறல்கள் நடந்துள்ளதாக யுஏஇ மனிதவள மற்றும் குடியேற்ற துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விதிமீறலில் ஈடுபட்ட கம்பெனிகளுக்கு ஒவ்வொரு வழக்கிலும் 20,000 முதல் 10,000 திஹ்ரான்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த 1379 கம்பெனிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த 2170 பேரை சட்ட விரோதமாக வேலைக்கு நியமித்திருப்பதாக யுஏஇ மனிதவள மற்றும் குடியேற்ற துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் 2026ம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 10 சதவீதம் எட்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தங்களின் குடியேற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையை இரண்டு சதவீதம் மட்டுமே அதிகரிக்க வேண்டும் என யுஏஇ மனிதவள மற்றும் குடியேற்ற துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால் 2022 ம் ஆண்டு மத்தியில் இருந்து 2024ம் ஆண்டு மே மாதம் வரை சேகரிக்கப்பட்ட புள்ளி விபரத்தின் படி 20,000 தனியார் கம்பெனிகளில் 97,000க்கும் அதிகவர்கள் வேலை செய்வத தெரிய வந்துள்ளது.
தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் ஆயிரக்கணக்கான கம்பெனிகளில் இது போன்ற சட்ட விரோதமாக குடியேற்ற விதிகளை மீறி தொழிலாளர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்கள் பணியாற்றும் உள்நாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை போலியாக அறிக்கை தயாரித்து காட்டி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.