புதிய மத்திய போக்குவரத்து சட்டத்தை கொண்டு வர யுஏஇ அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. யுஏஇ பிரதமரும், துணை அதிபரும், துபாய் அரசருமான ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்டோனம் இதனை தெரிவித்துள்ளார்.
புதிதாக கொண்டு வரப்பட உள்ள போக்குவரத்து சட்டத்தின் படி, வாகனங்களின் வகைகள் மற்றும் சாலைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் திருத்தங்கள் இருக்கும். இந்த நடவடிக்கையானது உலகளவில் போக்குவரத்துத் துறையின் விரைவான வளர்ச்சியைக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு கொண்டுவரப்பட உள்ளது.
இது குறித்து ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்டோனம் கூறுகையில், புதிய சட்டமானது சொந்தமாக ஓட்டும் வாகனங்கள் மற்றும் மின்சார கார்களின் பயன்பாட்டை விரிவுபடுத்தும். பல்வேறு வகையான தனிப்பட்ட போக்குவரத்து வழிமுறைகள் மற்றும் ஒட்டுமொத்த போக்குவரத்தை நம்பியிருப்பது உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொள்ளும்.நாட்டின் சாலை இணைப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமான இந்த சட்டம் இருக்கும் என்றார்.
ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்டோனம் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விதமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, அதற்கு பிறகே இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக பொருளாதார வளர்ச்சி, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, பிரிக்ஸ் நாடுகளின் உறுப்பினர் பதவியை பலப்படுத்த, டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போக்குவரத்து சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்