ஹஜ் யாத்திரைக்கான புதிய கட்டுப்பாடுகளை சமீபத்தில் யுஏஇ அரசு அறிவித்துள்ளது. இதன் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஆபரேட்டர்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்கான விண்ணப்பங்கள் அல்லது கோரிக்கைகளை இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளை பொது ஆணையத்தின் முன் அனுமதியின்றி பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித யாத்திரை சேவைகளை தவறாக பயன்படுத்துபவர்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் தனி நபர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு 50,000 திஹ்ரான் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஹஜ் அல்லது உம்ராவுக்கான பயணத்தை ஏற்பாடு செய்வதற்கு முன் அல்லது அதற்கான விளம்பரத்தை வெளியிடுவதற்கு முன் உரிய அனுமதி ஆபரேட்டர்கள் உரிய அனுமதி பெற வேண்டும். உரிய அங்கீகாரம் இல்லாமல் நன்கொடைகள் வசூலிப்பத அல்லது பெறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய புனித பயணங்களை ஒழுங்குமுறை செய்வதற்காக லைசென்ஸ் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட உள்ளது. சட்ட விரோத செயல்பாடுகளை தடுக்கும் இந்த கடுமையான புதிய நடைமுறைகளை முறையாக லைசென்ஸ் பெற்ற ஆபரேட்டர்கள் வரவேற்றுள்ளனர்.
சில சட்ட விரோத ஆபரேட்டர்கள் மிக குறைந்த கட்டணத்தில் உம்ராவுக்கு பயணம் அழைத்து செல்வதாக கூறி விளம்பரம் செய்து வருகிறார்கள். இது போன்றவர்களை கட்டுப்படுத்த இது சிறந்த முறை என ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். பல யாத்ரீகர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தை வைத்து புனித ஹஜ் யாத்திரை வருகிறார்கள். அவர்களை முட்டாள்களாக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்