துபாயில் உள்ள கம்பெனி ஒன்றில் work permit மூலமாக வேலை செய்யும் ஒருவர் golden visa எனப்படும் நிரந்த குடியுரிமையை பெற வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகள், சட்டதிட்டங்கள் உள்ளன. யுஏஇ.,ல் சொத்து வாங்கினால் மட்டும் golden visa பெற்று விட முடியாது. சொத்துக்கள் அல்லது தொழில்களில் முதலீடு செய்பவர்களும் golden visa பெற்று விட முடியாது.
யுஏஇ.,ல் golden visa பெற வேண்டும் என்றால் அவர் யுஏஇ.,ல் வேலைவாய்ப்பை பெற்றிருக்க வேண்டும். golden residency visa பெற விரும்பினால், முதலில் அது பற்றி தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் முதலில் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே அவர்கள் பெற்ற work permit ஐ ரத்து செய்தால் மட்டுமே golden visa பெற முடியும்.
அதனால் என்ன காரணத்திற்காக work permit ஐ ரத்து செய்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு அந்த நிறுவனத்திடம் எழுத்து பூர்வமாக தெரிவித்து, அந்த நிறுவனத்திடம் இருந்து அதற்கான கடிதத்தையும் பெற வேண்டும். அதற்கு பிறகே golden visa விற்கு விண்ணப்பிக்க முடியும். முறைப்படி மனிதவள அமைச்சகத்திற்கு work permit ரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். அதற்கு தேவையான ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும்.
ஒருமுறை golden visa பெற்ற தொழிலாளரின் work permit ரத்து செய்யப்பட்டால், அவர் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புதிய வேலைவாய்ப்பு கான்ட்ராக்ட் பெற வேண்டும். ஒப்பந்தம் மாற்றப்பட்டதையும் மனிதவள அமைச்சகத்திடம் தெரிவித்து, அதற்கான சான்றிதழை பெற வேண்டும். இந்த சான்றிதழை பெறுவதற்கு அவர்கள் பெற்றிருக்கும் திறனுக்கு ஏற்ப கல்வி தகுதியும், ஆவணங்களும் பெற்றிருக்க வேண்டும்.