இனி அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் சென்று சுற்றி பார்ப்பதற்கு ஒரே GCC tourist visa வை அறிமுகம் செய்ய உள்ளதாக ஐக்கிய அரசு அமீரகம் அறிவித்துள்ளது. இதனால் இனி உள்ளூர் மட்டும் சர்வதேச சுற்றுலா நிறுவனங்கள் இதற்கு ஏற்றது போல் டூர் பேக்கேஜ்களை அறிமுக செய்ய உள்ளன.
பயணம் மற்றும் சுற்றுலா துறை நிர்வாகிகள் இது பற்றி கூறுகையில், இந்த சுற்றுலா விசாவில் 3 நாடுகளில் 4000 முதல் 5000 திஹ்ரான் செலவிலேயே இரண்டு இரவுகள் தங்க முடியும். பயணம், ஓட்டல் செலவு, 3 நாடுகளில் சுற்றிப் பார்ப்பதற்கான செலவும் இந்த தொகையிலேயே அடங்கி விடுமாம். கடந்த வாரம் நடைபெற அரேபிய பயண சந்தை தொடர்பான அமைச்சக ஆலோசனையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் GCC tourist visa அறிமுகம் செய்யப்படும் என்றும், இது Schengan style visa வை போன்று 6 அரபு நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதே போன்ற விசா ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் அமலில் உள்ளது. இதனால் அங்குள்ள சுற்றுலா துறை நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. அதே போல் வளைகுடாக நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புபவர்கள் சவுதி அரேபியா முதல் ஓமன் வரை பயணிக்க இந்த விசா உதவிகரமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.