வழக்கமான பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள், அமெரிக்க க்ரீன் கார்டு வைத்திருப்பவர்கள், ஐரோப்ப குடியுரிமை கொண்டவர்கள் அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்தவர்கள் துபாய் வர வேண்டும் என்றால் முதலில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
preapproved விசா பெற வேண்டும் என்றால் யுஏஇ வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக கண்டிப்பாக ஆன்லைனில் விண்ணப்பித்திருக்க வேண்டும். அதோடு short term விசா, மேலும் 14 நாட்களுக்கு, அதுவும் ஒரே ஒரு முறை மட்டுமே நீட்டிக்கப்படும் என துபாய் General Directorate of Residency and Foreigners Affairs (GDRFA) தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நடைமுறைகளின் படி தகுதியுடைய இந்தியர்கள் யுஇஏ வருவதற்கான விசாவை யுஏஇ விமான நிலையங்ககளில் சில ஆண்டுகள் வரை பெற்றுக் கொள்ள முடியும். விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கும் போது immigration counter ல் விசாவிற்கு ஏற்ற படி முத்திரை பதித்து தரப்படும். ஆனால் தற்போது முதலில் ஆன்லைனில் விண்ப்பித்த பிறகு தான் துபாய் வர முடியும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
துபாய் வருவதற்கு தேவையானை :
*செல்ல தகுந்த பாஸ்போர்ட் அல்லது பயணத்திற்கான ஆவணம் வைத்திருக்க வேண்டும்.
*அமெரிக்கர்கள் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கான க்ரீன் கார்டு, ஐரோப்பா நாடுகளை சேர்ந்தவர்களுக்கான விசா ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
*வெள்ளை பிற பின்புலத்தில் எடுக்கப்பட்ட போட்டோ வைத்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை :
*இந்தியர்கள் pre approved விசா பெறுவதற்கு GDRFA இணையதளமான smart.gdrfad.gov.ae ல் log in செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
*தங்களை பற்றிய விபரங்களை பூர்த்தி செய்து, கட்டணமான 253 திஹார்களை செலுத்த வேண்டும்.
*விசா வழங்கப்பட்டதற்கான தகவல் இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
*ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்கு பிறகு விசா வழங்குவது தொடர்பான பணிகள் நிறைவு செய்யப்படும்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்