ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய கோல்டன் விமா திட்டம், சில வகையான வெளிநாட்டினருக்கு ஸ்பான்சர் தேவையில்லாமலேயே நீண்ட காலம் வசிப்பதற்கு வழி வகை செய்கிறது. எமிரேட்ஸில் திறமையான நபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற முக்கிய பங்களிப்பாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோல்டன் விசா யாருக்கு என்ன சலுகை வழங்குகிறது?
முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், விஞ்ஞானிகள், திறமையாளர்கள், நிபுணர்கள், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பட்டதாரிகள், மனிதகுலத்திற்கு சேவையாற்றுபவர்கள், பாதுகாப்பு துறையில் பணிபுரியும் முதல்நிலை பணியாளர்கள் ஆகியோருக்கு கோல்டன் விசா சலுகைகள் வழங்குகிறது. இவர்களில் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 5 அல்லது 10 ஆண்டுகள் வரை அமீரகத்தில் தங்கிவோ, முதலீடு செய்யவோ, படிக்கவோ, பணியாற்றவோ இந்த கோல்டன் விசா அனுமதிக்கிறது.
- கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் multi-entry permit பெற முடியும்.
- தாங்கள் அமீரகத்தில் தங்குவதற்காக 5 அல்லது 10 ஆண்டு காலத்தை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
- இதற்கு முன் யுஏஇ.,வை சேர்ந்தவர்கள் அனைவரும் 6 மாதங்கள் மட்டுமே நாட்டிற்கு வெளியே தங்க முடியும். அதற்குள் நாட்டிற்கு திரும்ப வேண்டும். ஆனால் தற்போது 6 மாதத்திற்கு பிறகும் தங்கலாம். கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் திரும்பி வருவதற்கான அனுமதி ஏதும் இல்லாமலேயே நாட்டிற்கு வெளியே 6 மாதங்களுக்கு பிறகும் தங்கலாம்.
- கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு ஸ்பான்சர்கள் யாரும் தேவையில்லை.
- கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் தங்களின் கணவர் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஸ்பான்சர் செய்வதற்கு தகுதியாகிறார்கள்.
- சேவை பணியாளர்கள் அல்லது வீட்டு உதவிக்காக எத்தனை பணியாளர்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதற்கு எந்த எண்ணிக்கை அளவம் கிடையாது.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்