
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு துபாய் அரசு ஊழியர்களுக்கு, ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை முன்கூட்டியே வழங்கும் படி துபாய் அரசர் ஷேக் ஹம்தன் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்டோம் உத்தரவிட்டுள்ளார்.
அரசரின் இந்த புதிய உத்தரவால் துபாய் அரசு ஊழியர்கள் துபாய் மாதத்திற்கான சம்பள தொகையை ஜூன் 13ம் தேதியே பெற்றுக் கொள்ள முடியும். பக்ரீத் பண்டிகைக்கான பொருட்களை அரசு ஊழியர்கள் வாங்கிக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துபாய் அரசுத்துறை தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்ல பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு யுஏஇ.,வாசிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிறை தெரிவதன் அடிப்படையில் விடுமுறை தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறை தெரிந்ததால் இஸ்லாமிய மாதமான துல் ஹிஜ்ஜாஹ் இன்று (ஜூன் 06) துவங்கியதாக சவுதி அரேபியாவின் பிறை அறிவிப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்