Nol card ஐ வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்று மெட்ரோ வாசலில் குழப்பத்துடன் நிற்பவர்களுக்கு இதோ சூப்பரான வழி.
நாம் வீட்டில் இருந்து புறப்படும் போது எதை மறந்தால், கண்டிப்பாக மொபைல் போனை மறக்காமல் எடுத்துச் செல்வோம். இனி மெட்ரோவில் பயணம் செய்வதற்கு மொபைல் போன் மட்டும் கையில் இருந்தாலே போதும். அதிலும் நீங்கள் சாம்சங் மொபைல் பயன்படுத்துபவராக இருந்தால் எளிதில் உங்களின் Nol card ஐ டிஜிட்டலில் வைத்துக் கொள்ளலாம். அதோடு மெட்ரோ பயணத்திற்கான கட்டணத்தையும் மொபைல் வழியாகவே செலுத்தி விடலாம்.
Nol card என்பது துபாயில் சாலை போக்குவரத்தில் பயணம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் கார்டு ஆகும். துபாயை பொருத்தவரை மெட்ரோவில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை பணமாக செலுத்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதற்கு பதிலாக Nol card என்ற கார்டு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நாம் பயணம் செய்வதற்கான கட்டணத்தை இதில் ரீசார்ஜ் செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
Roads and Transport Authority (RTA) மற்றும் Samsung Gulf Electronics ஆகியவை இணைந்து இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன. அதன் படி, இனி மொபைலிலேயே Nol card ஐ வைத்துக் கொள்ளலாம். அதற்கு இந்த 6 விஷயங்களை செய்தாலே போதும்.
Nol cardஐ டிஜிட்டல் ஆக்க செய்ய வேண்டிய 6 விஷயங்கள் :
1. முதலில் Nol card ஆப்பினை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்.
2. பிறகு login செய்து, இந்த ஆப்பை உங்களின் UAE Pass ஆப் உடன் இணைக்க வேண்டும். மிக எளிதாக இதை செய்து விடலாம்.
3. இப்போது get my Nol card என்பதை கிளிக் செய்யுங்கள்.
4. உடனடியாக நீங்கள் உங்களின் Nol card ஐ டிஜிட்டலில் பெற்றுக் கொள்வதற்கான முறை திரையில் காட்டப்படும். ஆனால் அந்த சமயத்தில் Nol card உங்களின் கையில் இருப்பது அவசியம்.
5. போனிலேயே உங்களின் Nol card ஐ வைத்துக் கொள்வதற்கான வழிகள் காட்டப்படும். அது உறுதி செய்யப்படும் வரை உங்களின் Nol card ஐ கையிலேயே வைத்திருக்க வேண்டும்.
6. அது முடிந்ததும் Nol card ஐ உங்களின் போனின் பின்புறம் இருந்து அகற்றி விடலாம் என்ற அறிவிப்பு வரும். சில நிமிடங்களிலேயே உங்களின் கார்டினை டிஜிட்டல் செய்து விடலாம்.
ஆனால் உங்களின் Nol card ஐ டிஜிட்டலுக்கு மாற்றி விட்டால் நீங்கள் கையில் வைத்திருக்கும் உங்களின் Nol card காலாவதி ஆகி விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்