யுஏஇ டிரான்சிட் விசாவிற்கு விண்ணபிப்பது எப்படி? முழு விபரம் இதோ…

டிரான்சிட் விசா என்பது நீண்ட பயணத்திற்கு நடுவே ஏதாவது ஒரு நாட்டில் இறங்கி, சில ஓய்வெடுத்து விட்டு பிறகு பயணத்தை தொடரலாம். அப்படி ஓய்வெடுக்கும் போது விமான நிலையத்திலேயே அமர்ந்து பொழுதை கழிக்காமல், அந்த நாட்டில் சில இடங்களை சுற்றி பார்க்கும் வாய்ப்பு அளிக்கும் அனுமதி சீட்டிற்கு டிரான்சிட் விசா என்று பெயர். யுஏஇ.,யில் 46 மணி முதல் 90 மணி நேரம் வரை தங்கி இருந்து சுற்றி பார்த்து விட்டு, மீண்டும் பயணத்தை தொடருவதற்கான விசாவிற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை :

* 3 மாதங்கள் வரை செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
* வெள்ளை பின்புலத்தில் இருக்கும் போட்டோ
* புறப்படும் இடம் துவங்கி, சென்றடையும் இடம் தவிர மூன்றாவது இடத்தில் தங்குவதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

* போலி நிறுவனங்களிடம் சிக்கி ஏமாறாமல் இருப்பதற்கு யுஏஇ.,ஐ அடிப்படையாகக் கொண்ட விமான நிறுவனங்களில் மட்டும் பயணத்திற்கான போக்குவரத்து விசாவை முன்பதிவு செய்ய வேண்டும்.

* யுஏஇ டிரான்சிட் விசா பெற வேண்டும் என்றால் முதலில் நீங்கள் பயணிக்கும் விமான நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். ஏஜென்சி மூலம் முன்பதிவு செய்திருந்தால் விசா பெறுவதற்கு ஏஜென்சி உங்களுக்கு உதவும்.

* ஏஜென்சி மற்றும் விமான நிறுவனமும் அனைத்தையும் செய்து கொண்டுப்பார்கள் என்றாலும் விசா நிலவரத்தை தெரிந்து கொள்வது சிறப்பானது.

டிக்கெட்டை எங்கு வாங்க வேண்டும் ?

யுஏஇ., விமான நிறுவனங்கள் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சில் மட்டுமே டிக்கெட்டை பெற வேண்டும். ஒருவேளை துபாய்க்குச் செல்ல விரும்பினால், உங்கள் டிக்கெட்டுகளை எமிரேட்ஸ் ஏர்லைன் அல்லது ஃப்ளை துபாய் ஆகியவற்றில் வாங்க வேண்டும். ஒருவேளை, நீங்கள் அபுதாபிக்கு செல்ல விரும்பினால், உங்கள் டிக்கெட்டுகளை எதிஹாட் ஏர்வேஸ் அல்லது ஏர் அரேபியாவில் இருந்து பெற வேண்டும்.

டிரான்சிட் விசாவின் ஆயுட் காலம் :

டிரான்சிட் விசா 46 மணி நேரம் முதல் 90 மணி நேரம் வரை மட்டுமே செல்லத்தக்கதாகும். ஒருவேளை நீங்கள் 46 மணி நேரத்திற்கான டிரான்சிஸ்ட் விசா பெற்றிருந்தால் அதை 90 மணி நேரமாக நீட்டிக்க முடியாது. யுஏஇ.,க்கு நீங்கள் வந்தது முதல் அடுத்த 48 மணி நேரம் வரை இந்த விசாவை இலவசமாக பயன்படுத்தலாம். விசா வழங்கப்பட்ட 48 மணி நேரத்தில் நீங்கள் மீண்டும் நாட்டை விட்டு புறப்பட்டு விட வேண்டும். ஒருவேளை நீங்கள் 90 மணி நேரம் டிரான்சிட் விசா பெறுவதாக இருந்தால் அதற்கு 50 திஹ்ரான் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த விசாவையும் நீட்டிக்கவோ, புதுப்பிக்கவோ முடியாது. நாட்டை விட்டு புறப்படும் போது நீங்கள் 300 திஹ்ரான் மட்டும் செலுத்தினால் போதும். அதற்கு மேல் ஏஜன்சியோ, விமான நிறுவனமோ கட்டணம் கேட்டால் நீங்கள் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்

  • Anu

    அனு என்பது UAE Tamil Web-இன் ஆசிரியர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எடிட்டோரியல் அடையாளம். ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கான செய்திகள், வேலைவாய்ப்புகள், சமூக நிகழ்வுகள், பயண தகவல்கள் மற்றும் பயனுள்ள வழிகாட்டி கட்டுரைகளை எளிமையான தமிழில் தொகுத்து வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார். UAE மற்றும் உலகளாவிய தமிழ் சமூகத்திற்கு நம்பகமான, விரைவான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்குவது UAE Tamil Web-இன் முக்கிய நோக்கமாகும்.

    Related Posts

    எல் நினோ 2026: துபாய் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மீண்டும் கடுமையான வெப்பமும் கனமழையும் வருமா?

    2024 ஏப்ரல் மாதத்தை துபாயில் வாழ்ந்தவர்கள் எளிதில் மறந்துவிட முடியாது. வழக்கம்போல வேலைக்குச் செல்ல தயாரான பலர், சில மணி நேரங்களுக்குள் நகரம் முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டிருப்பதை நேரில் பார்த்தனர். முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான வாகனங்கள் பாதியில் நின்றுவிட்டன.…

    Read more

    100 வயது வரை ஆரோக்கியமாக வாழ முடியுமா? அதற்காகவே புதிய அமைப்பை உருவாக்கிய துபாய்!

    உலகின் முதல் Longevity தலைநகராக மாறும் கனவில் துபாய் ஒரு காலத்தில் எண்ணெய், வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைகளால் உலக கவனத்தை ஈர்த்த துபாய், இன்று செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆராய்ச்சி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ புதுமைகள் போன்ற துறைகளில்…

    Read more

    You Missed

    எல் நினோ 2026: துபாய் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மீண்டும் கடுமையான வெப்பமும் கனமழையும் வருமா?

    • June 14, 2026
    எல் நினோ 2026: துபாய் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மீண்டும் கடுமையான வெப்பமும் கனமழையும் வருமா?

    100 வயது வரை ஆரோக்கியமாக வாழ முடியுமா? அதற்காகவே புதிய அமைப்பை உருவாக்கிய துபாய்!

    • June 12, 2026
    100 வயது வரை ஆரோக்கியமாக வாழ முடியுமா? அதற்காகவே புதிய அமைப்பை உருவாக்கிய துபாய்!

    D33: அடுத்த 10 ஆண்டுகளில் துபாயை உலகின் Top 3 நகரங்களில் ஒன்றாக மாற்றும் மாஸ்டர் பிளான்!

    • June 10, 2026
    D33: அடுத்த 10 ஆண்டுகளில் துபாயை உலகின் Top 3 நகரங்களில் ஒன்றாக மாற்றும் மாஸ்டர் பிளான்!

    துபாயின் புதிய அடையாளம்: AI செஃப் உருவாக்கும் மெனு… மனிதர்கள் சமைக்கும் ஹோட்டல்!

    • July 17, 2025

    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    • January 4, 2025
    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    • January 2, 2025
    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!