வேர்ல்ட் டூர் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் பட்டியலில் சமீப காலமாக துபாயும் முக்கிய இடம்பிடித்துள்ளது. அப்படி துபாய்க்கு டூர் வரும் சுற்றுலா பயணிகளை அசர வைக்கும் வகையில் பல ஆச்சரியமூட்டும் விஷயங்களை துபாய் அரசு அறிமுகம் செய்துள்ளது. துபாயில் உள்ள நகரங்கள், கலாச்சாரம் மட்டுமின்றி இங்கு வந்து சுற்றுலா பயணிகள் அனைத்து வகையிலும் சந்தோஷத்தை அனுபவிக்க என்னென்ன விஷயங்களை செய்துள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
துபாயில் சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியம் தரும் 5 விஷயங்கள் :
இலவச சிம் கார்டு :
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள immigration நடைமுறைகள் நிறைவடைந்ததும் அங்கள்ள கவுன்ட்டரில் எந்த தொலைதொடர்பு நிறுவனத்தின் சிம் கார்டையும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். Du என்ற தொலைதொடர்பு நிறுவனம் 90 நாட்கள் வரை பயன்படுத்தக் கூடிய வகையிலான Tourist Du sim ஐ வழங்குகிறது. இதில் 24 மணி நேரமும் இணைய சேவையை பயன்படுத்தக் கூடிய வகையில் 1 ஜிபி இலவச டேட்டாவும் உள்ளது. இதே போல் etisalat, virgin மொபைல் நிறுவனங்களும் சுற்றலா பயணிகளுக்காக சலுகைகளுடன் சிம் கார்டுகளை வழங்குகின்றன.
சுற்றுலா சலுகை கார்டு :
இலவச சிம் கார்டை போலவே இலவச சலுகைகள் பலவும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. உங்கள் மொபைலில் உள்ள barcode ஐ ஸ்கேன் செய்து ALSAADA டூரிஸ்ட் கார்டினை டவுன்லோடு செய்த கொள்ளலாம். அந்த ஆப்பில் நீங்கள் துபாய் வந்த தேதி, பாஸ்போர்ட் எண் போன்ற தகவல்களை குறிப்பிட வேண்டும். அந்த ஆப்பில் உங்கள் பெயரிலேயே டிஸ்கவுன்ட் கார்டு உருவாக்கி தரப்படும். இந்த சலுகை கார்டை கார் கட்டணம் செலுத்தும் இடம், நாணயம் மாற்றம், வங்கி பண பரிவர்த்தனை, ஆரோக்கியம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சலுகை கட்டணத்திலேயே இந்த சேவைகளை பெற முடியும்.
வரி இல்லாமல் பொருட்கள் வாங்கலாம் :
யுஏஇ வரும் சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் 250 திஹ்ரான் வரை வரி இல்லாமல் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் பொருட்கள் வாங்க செல்லும் கடையில் planet logo இருந்தால் அவர்களின் tax free form வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்கள் உங்களின் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து, tax free tag ஐ நீங்கள் வாங்கிய பொருளின் ரசீதுடன் இணைத்து கொடுத்து விடுவார்கள். அதனால் நீங்கள் வாங்கிய பொருளுக்கு வரி இல்லாமல், அதற்கான விலையை மட்டும் அளித்தால் போதும். இது 90 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
VAT refund :
பொருட்கள் வாங்கிய கடையின் பிளானட் பார்ட்னரிடம் கேட்டால் அவர்கள் நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான வாட் வரி தொகையை திருப்பி அளித்து விடுவார்கள். அப்படி இல்லை என்றால் விமான நிலையத்தில் நீங்கள் பொருட்கள் வாங்கியதற்கான ரசீதுகளை அளித்து அதற்கான பணத்தை யுஏஇ திஹ்ரைனாகவோ அல்லது உங்களின் கிரேடிட் கார்டிலோ பெற்றுக் கொள்ளலாம்.
இலவச பார்க்கிங் :
மாற்று திறனாளி சுற்றுலா பயணிகளுக்க துபாய் முழுவதும் பொது இடங்களில் இலவச பார்க்கிங் உண்டு. இது 3 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும். இந்த சேவையை பெற RTA வின் ஆப் அல்லது இணையதளம் மூலமாகவும் விண்ணப்பம் செய்ய முடியும். அதே போல் PoD நாட்டினர் மற்றும் சுற்றுலா பணிகளுக்கான Sanad கார்டு, ஸ்மார்ட் கார்டு வைத்திருந்தால் 50 சதவீதம் சலுகை கட்டணத்தில் டாக்சியில் பயணம் செய்யலாம்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்