தாறுமாறாக ஏறும் தங்கம் விலை…யுஏஇ.,வில் நகை விற்பனை சரிவு

யுஏஇ.,யில் மே 20 ம் தேதியன்று தங்கத்தில் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

மே 20 ம் தேதி பகல் நேர நிலவரப்படி, யுஏஇ.,ல் 24 காரட் தங்கத்தின் கிராமுக்கு 296.0 திஹ்ரான் அதிகரித்துள்ளது. காலையில் சந்தை நேர துவக்கத்தின் போது 292.5 திஹ்ரானாக இருந்த தங்கத்தின் விலை, உயர்ந்து, பிறகு மீண்டும் மாலையில் 293.0 திஹ்ரானாக ஆக இருந்தது. அதே சமயம் 22 காரட் தங்கத்தின் விலை 271.25 திஹ்ரானாகவும், 21 காரட் தங்கத்தின் விலை 262.5 திஹ்ரானாகவும், 18 காரட் தங்கத்தின் விலை 225.0 திஹ்ரானாகவும் உள்ளன.

பொதுவாக இது போல் தங்கத்தின் விலை அதிரடியாக உயரும் போது துபாய் தங்க நகை வியாபாரிகள், என்ன நடக்கிறது என்பதை பொறுமையாக கண்காணிப்பது வழக்கம். அதனால் இந்த முறையும் தங்கத்தின் விலை மீண்டும் குறையும் என்றும், தங்கம் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்காலிகமான ஒன்று தான் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். மே 10 ம் தேதி அட்சய திருதியை நாளில் தான் அதிகமானவர்கள் வந்து தங்கம் வாங்கி சென்றதால், தற்போது விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என சொல்லப்படுகிறது.

அமெரிக்க ஃபெடரல் வங்கி, தங்கத்திற்கான வட்டி விகிதத்தை குறைத்ததே உலகம் முழுவதும் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஆசிய சந்தைகளிலும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பளமும் மத்திய கிழக்கு நாடுகளில் சந்தைகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மற்றொரு புறம் ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்டவைகளும் சந்தைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்

  • Anu

    அனு என்பது UAE Tamil Web-இன் ஆசிரியர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எடிட்டோரியல் அடையாளம். ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கான செய்திகள், வேலைவாய்ப்புகள், சமூக நிகழ்வுகள், பயண தகவல்கள் மற்றும் பயனுள்ள வழிகாட்டி கட்டுரைகளை எளிமையான தமிழில் தொகுத்து வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார். UAE மற்றும் உலகளாவிய தமிழ் சமூகத்திற்கு நம்பகமான, விரைவான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்குவது UAE Tamil Web-இன் முக்கிய நோக்கமாகும்.

    Related Posts

    ஸ்மார்ட் துபாயில் ஸ்மார்ட்டாக கார் ஓட்டுவது எப்படி? ‘சாலிக்’ டோல்கேட்டில் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த சூப்பர் டிப்ஸ்!

    சாலிக் டோல்கேட் UAE: துபாயில் வாகனம் ஓட்டும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முழுமையான வழிகாட்டி (2026) துபாயில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சாலைகளில் பயணிக்கின்றன. இந்த மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பு நெரிசலின்றி இயங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சாலிக் (Salik) மின்னணு…

    Read more

    துபாயில் IT வேலை தேடுறீங்களா? இல்லை… அடுத்த பெரிய வாய்ப்பை உருவாக்கப் போறீங்களா?

    துபாயின் IT உலகம்: வேலைவாய்ப்பா, தொழில்முனைவா, அல்லது அடுத்த பெரிய வாய்ப்பா? “துபாயில் IT வேலை இருக்கா?” இந்தக் கேள்வி இன்று புதிதல்ல. ஆனால் அதற்கான பதில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்ததைப் போல இப்போது இல்லை. ஒரு காலத்தில் டுபாய்…

    Read more

    You Missed

    ஸ்மார்ட் துபாயில் ஸ்மார்ட்டாக கார் ஓட்டுவது எப்படி? ‘சாலிக்’ டோல்கேட்டில் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த சூப்பர் டிப்ஸ்!

    • July 8, 2026
    ஸ்மார்ட் துபாயில் ஸ்மார்ட்டாக கார் ஓட்டுவது எப்படி? ‘சாலிக்’ டோல்கேட்டில் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த சூப்பர் டிப்ஸ்!

    துபாயில் IT வேலை தேடுறீங்களா? இல்லை… அடுத்த பெரிய வாய்ப்பை உருவாக்கப் போறீங்களா?

    • June 30, 2026
    துபாயில் IT வேலை தேடுறீங்களா? இல்லை… அடுத்த பெரிய வாய்ப்பை உருவாக்கப் போறீங்களா?

    Google பண்ணு தெரியும்… அது என்ன ‘Dubai-it’? ஒரு நகரத்தின் பெயர் Verb-ஆக மாறிய ஆச்சரியக் கதை!

    • June 30, 2026
    Google பண்ணு தெரியும்… அது என்ன ‘Dubai-it’? ஒரு நகரத்தின் பெயர் Verb-ஆக மாறிய ஆச்சரியக் கதை!

    மணலில் வரையப்பட்ட ஒரு கனவு… இன்று உலகம் வியக்கும் அபுதாபி எப்படி உருவானது?

    • June 26, 2026
    மணலில் வரையப்பட்ட ஒரு கனவு… இன்று உலகம் வியக்கும் அபுதாபி எப்படி உருவானது?

    Emirates ID vs UAE PASS: இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? UAE குடியிருப்பாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

    • June 25, 2026
    Emirates ID vs UAE PASS: இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? UAE குடியிருப்பாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

    போர் பதற்றத்திலும் நின்றுவிடாத துபாய்: ஏவுகணை அச்சத்தின் மத்தியில் 65,000 பேரை ஈர்த்த Dubai World Cup என்ன சொல்கிறது?

    • June 24, 2026
    போர் பதற்றத்திலும் நின்றுவிடாத துபாய்: ஏவுகணை அச்சத்தின் மத்தியில் 65,000 பேரை ஈர்த்த Dubai World Cup என்ன சொல்கிறது?