அமீரகத்தில் போக்குவரத்து முறையை சீரமைக்க துபாயில் புதிய போக்குவரத்து திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. போக்குவரத்தை எளிதாக்க எடுக்கப்பட்டுள்ள இந்த இந்த புதிய திட்டத்தால் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பள்ளி போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பள்ளிகளை சுற்றி உள்ள போக்குவரத்தை 13 சதவீதம் உயர்த்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த புதிய போக்குவரத்து திட்டம் குறித்து யுஏஇ வாசிகள் கூறுகையில், இந்த புதிய திட்டத்தால் மாணவர்கள் பள்ளி வாகனங்களை பயன்படுத்த துவங்கி விட்டால் பெற்றோர்கள் தங்களின் சொந்த வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவது குறையும். இதனால் போக்குவரத்து நெரிசலும் குறையும். பெற்றோர்களும் பள்ளி பஸ்களை பயன்படுத்த மாணவர்களை ஊக்குவிக்கிறோம். ஆனால் பஸ் கம்பெனிகள் கட்டணத்தை குறைத்து பெற்றோர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். அதோடு பெற்றோர்களும் பள்ளி வாகனங்களை பயன்படுத்த அனுமதித்தால் நன்றாக இருக்கும் என கருத்து கூறி வருகின்றனர்.
பள்ளி பஸ்களில் அனுப்புவது எங்களுக்கு சுலபம் தான். ஆனால் பஸ் கட்டணமும், பயணம் செய்யும் நேரமும் அதிகமாக இருக்கும் காரணத்தால் தான் தாங்களே தங்களின் பிள்ளைகளை தனியான வாகனங்களில் அழைத்து வருவதாக சில பெற்றோர்கள் கூறுகின்றனர். இன்னும் சிலர் பள்ளிகளுக்கு வந்த செல்வதற்கு மட்டும் ஒரு நாளில் 2 முதல் 4 மணி நேரத்தை தாங்கள் செலவிடுவதாக தெரிவிக்கின்றனர்.