புதிதாக மேலும் 3 நாட்டு குடிமக்களுக்கு இ விசா வழங்க முடிவு செய்திருப்பதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியா வருவதற்கு இ விசா பெற தகுதியான நாட்டினர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
பார்படாஸ், காம்ன்வெல்த் ஆஃப் தி பஹாமாஸ் மற்றும் கிரேனடா ஆகிய நாடுகளை சேர்ந்த குடி மக்களுக்கு தான் தற்போது இ விசா வழங்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த 3 நாடுகளுடன் அமெரிக்கா, ஐரோப்பா ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு ஷெங்கன் பகுதி விசா வைத்திருப்பவர்களுக்கும் சுற்றுலா விசா காலத்தை நீட்டிக்கும் சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் GCC நாடுகளில் வசிப்பவர்கள், சுற்றுலா பயணிகள், உம்ரா யாத்திரை வருபவர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்க உள்ளிட்ட நோக்கங்களுக்கு வருபவர்களும் இந்த இ விசா பெறுவதற்கு தகுதியானவர்கள் என சொல்லப்படுகிறது.
சவுதி மற்றும் ஃபிளைனாஸ் ஏர்லைன்ஸ் மூலம் சவுதி அரேபியா வருபவர்களுக்கு டிரான்சிட் விசாக்களை அறிமுகம் செய்யவும் சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இவர்கள் தங்களின் பயணத்தை துவங்குவதற்கு முன் 96 மணி நேரம் ஐக்கிய அரசு அமீரகத்தில் தங்க அனுமதிக்கிறது. சவுதி அரேபியாவின் சுற்றலா சலுகைகளை விரிவுபடுத்தவும், கலாச்சார தலங்களை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் சர்வதேச தொடர்புகளை விரிவுபடுத்தவும் இந்த புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.