துபாயில் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி, கும்மாளம் கொண்டாட்டம் என இருந்ததில் நீங்கள் வந்த டாக்சியிலேயே பர்ஸ், போன் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் மறந்து வைத்து விட்டு வந்து விட்டீர்களா? இப்போது என்ன செய்வது, எப்படி அனைத்து பொருட்களையும் மீட்பது என தவித்து, குழம்பிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்கு தான்.
துபாயை பொருத்தவரை இது போன்ற தவறுகள் நடந்தால் நீங்கள் பயப்பட தேவையே இல்லை. காரணம் உலகின் பாதுகாப்பான நகரங்களில் துபாயும் ஒன்று. இங்கு டாக்சியில் மறந்து தவற விட்ட பொருட்களை மீட்டு எடுப்பது மிகவும் சுலபம். அப்படி உங்கள் பொருட்களை மறந்து தவற விட்டு விட்டீர்கள் என்றால் இவற்றை செய்தாலே போதும்.
டாக்சியில் தவற விட்ட பொருட்களை மீட்க செய்ய வேண்டியவை :
1. நீங்கள் ஆன்லைனில் Hala taxi முன்பதிவு செய்து வரும் போது இவ்வாறு நடந்திருந்தால், உடனடியாக 800 9090 என்ற RTA call centre க்கு போன் செய்து, நீங்கள் டாக்சியில் பயணம் செய்த தேதி, நேரம், எங்கு ஏறி, எங்கு இறங்குனீர்கள், எந்த போன் நம்பரில் இருந்து புக் செய்தீர்கள் என்பது உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் careem வழியாக டாக்சி முன்பதிவு செய்திருந்தீர்கள் என்றால் எந்த app customer service பை போன் செய்த புகார் அளிக்கலாம்.
2. நீங்கள் டாக்சியின் பின் சீட்டில் உட்கார்ந்திருக்கும் போதே உங்களின் முக்கியமான, விலை உயர்ந்த பொருட்களை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் என்று தெரிய வந்ததும், போன் செய்து மட்டும் புகார் அளித்தால் போதாது. [email protected] என்ற இமெயில் முகரிக்கு உங்களிட் டாக்சி பயணம் பற்றி விபரங்களை அளித்து புகார் செய்ய வேண்டும்.
3. நீங்கள் RTA app ஐ download செய்து, உங்களின் புகாரை தெரிவித்து, உங்களின் தொலைந்து போன பொருட்களை மீட்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது,
* ஆப்பின் வலது புறம் மேல் பக்கத்தில் இருக்கும் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
* மெனுவில் உள்ள feedback என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
* பிறகு lost and found என்பதை கிளிக் செய்து, தொலைந்து போன் பொருட்கள் பற்றிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.
* உங்களின் பயண விபரம், பயணத்தின் போது நீங்கள் இருந்த இடம், தேதி, நேரம், பயணம் செய்ததற்கான டாக்சி ரசீது ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.
இந்த 5 விஷயங்களை அனுப்பி உடனேயே, உங்களின் பொருட்களின் தற்போதைய நிலை குறித்த RTA உங்களுக்கு text அனுப்பி விடும்.
4. நீங்கள் நேரடியாக சென்று புகார் கொடுத்தால் சரியாக இருக்கும் என விரும்பினால் எந்தவொரு RTA station க்கு வேண்டமானாலும் சென்று புகார் அளிக்கலாம். துபாய் மெட்ரோ, பஸ் நிலையங்களிலும் கூட RTA விற்கான அதிகாரி ஒருவர் இருப்பார். அங்கு பொறுப்பில் இருப்பவரிடம் உங்களுக்கு நடந்த விஷயங்கள் பற்றிய விபரங்களை தெரிவித்தால், எவ்வாறு புகார் அளிக்க வேண்டும் என்ற விபரங்களை அவரே தெரிவித்து உங்களுக்கு உதவுவார்.