துபாயில் உள்ள குடியிருப்புவாசிகள் பலரும் தங்களின் வீடுகளை காலி செய்த விட்டு, நகரங்களுக்காகவே சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாறி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது சிறிய அளவிலான, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
இவ்வாறு மக்கள் தங்களின் வீடுகளை காலி செய்து விட்டு, சிறிய வீடுகளுக்கு மாறுவதற்கு என்ன காரணம் என்பது பற்றி தொழில்துறை நிர்வாகிகளிடம் கேட்ட போது, துபாயில் பல பகுதிகளில் சமீப காலமாக வாடகை தொகை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் தகுதி உடைய வேலைக்கு வரும் இளைஞர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டு வாடகை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
இதனால் செலவை தாக்குபிடிக்க முடியாமல், தங்களுக்கு தங்குவதற்கு போதுமான அளவில் இருந்தால் மட்டும் போதும் என்பதால் சிறிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல சிறிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு வாடகை செலுத்த முடிவதால் மற்ற விஷயங்களில் முதலீடு செய்வது எளிதாகிறது. இத நஷ்டம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் என்பதாலும் சிறிய ரக வீடுகளை அதிகமானவர்கள் விரும்புவதாக சொல்கிறார்கள்.
அதே சமயம் பெரிய வீடுகளில் வசிக்க விரும்புபவர்கள், நகரங்களுக்கு வெளியிலேயே வீடு பார்த்து வருகிறார்கள். பெரிய இட வசதி கொண்ட, அதே சமயம் குறைந்த விலையில் இருக்கக் கூடிய வீடுகளை தேடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. சிறிய வீடுகளையே அதிகமானவர்கள் விரும்புவதால், சிறிய அளவிலான வீடுகள் துபாயில் புதியதாக அதிகம் கட்டப்பட்டு வருகிறது. முன்பு இருந்ததை விட 12.5 சதவீதம் சிறியதாக இருந்தாலும் இதையே அதிகமானவர்கள் விரும்புவதாக சொல்லப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு தான் இது போன்ற சிறிய வீடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 12 மாதங்களில் இடங்களின் விலை துபாயில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான தொழில் நிறுவனங்களும் சிறிய ரக வீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதிக வீடுகளை கட்டி வருவதாக சொல்லப்படுகிறது. துபாயில் முக்கிய பகுதிகளில் 2014ம் ஆண்டிற்கு பிறகு குடியேறும் மக்கள்தொகையும் அதிகரித்து வருவதால் வீட்டு வாடகையும் அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்