10 வருடம் செல்லுபடியாகக் கூடிய Blue Residency visa வை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகம் செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட காலம் வாழ்வதற்காக வழங்கப்படும் விசா இதுவாகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தங்களின் பங்களிப்பினை அளித்த மற்றும் முயற்சி மேற்கொண்ட வழக்கறிஞர்களுக்காக யுஏஇ.,ல் இந்த விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Blue Residency visa பெற தகுதியானவர்கள் :
சர்வதேச நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்கள் உட்பட சுற்றுச்சூழல் நடவடிக்கையை ஆதரிப்பவர்களுக்கு ப்ளூ ரெசிடென்சி வழங்கப்படும்; உலகளாவிய விருது வென்றவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பணிகளில் “சிறந்த” ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் ப்ளூ ரெசிடென்சி விசா பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.
apply செய்யும் முறை :
Blue Residency visa பெறுவதற்கு தகுதி உள்ள நபர்கள் Federal Authority for Identity, குடியுரிமை, சுரங்க துறை, துறைமுக பாதுகாப்பு ஆகிய துறைகளின் வழியாக தங்களின் விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நீண்ட கால விசா பெறுவதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வார்கள்.
யுஏஇ.,யில் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க குடியுரிமை பல விதமான விசாக்களை வழங்கி வருகிறது. 2019ம் ஆண்டு தான் 10 ஆண்டுகள் வரை வசிக்க குடியுரிமை அளிக்கும் கோல்டன் விசா திட்டம் முதலீட்டாளர்கள், தொழில் துவங்குவோர், விஞ்ஞானிகள், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், பட்டதாரிகள், மனிதநேய சேவையாளர்கள் உள்ளிட்டோருக்காக இந்த விசா அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு கழித்து தான் 5 ஆண்டுகள் வரை யுஏஇ.,வில் வசிக்க வழிவகை செய்யும் க்ரீன் விசா திறமையான பணியாளர்கள், ஃப்ரீலான்சர்ஸ், முதலீட்டாளர்கள், தொழில் துவங்குவோருக்காக அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.