இந்த 3 நாட்களை தவற விட்டு விடாதீர்கள்…எந்த பொருள் வாங்கினாலும் 90 சதவீதம் ஆஃபர்

துபாயில் 3 நாட்கள் சூப்பர் சேல் மேளா துவங்க உள்ளது. இந்த வார இறுதியில் 500 க்கும் அதிகமான பிராண்ட் பொருட்கள் 90 சதவீதம் வரை ஆஃபருடன் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த 3 நாள் சூப்பர் சேல்(3DSS)மே 31ம் தேதி துவங்கி, ஜூன் 02ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2000 க்கும் மேற்பட்ட பொருட்கள் சலுகை விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஃபேஷன், பியூட்டி, எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியன துபாய் முழுவதிலும் உள்ள மால்கள், ஷாப்பிங் மையங்கள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Dubai Festivals and Retail Establishment (DFRE) இது பற்றி கூறுகையில், கோடை கால ஆஃபராக மக்களுக்காக இந்த 3 நாட்கள் சூப்பர் சேல் மேளா நடத்தப்பட உள்ளது. ஈத் அல் அதாவிற்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த ஆஃபர் ஷாப்பிங் இஸ்லாமிய திருவிழா கொண்டாட்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். ஈத் அல் அதா, ஜூன் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அதற்கு முன் புதிய ஆடைகள், பரிசுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு வசதியாக இருக்கும் வகையில் இந்த சூப்பர் சேல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆடைகள், காலணிகள், எலக்ட்ரானிக் சாதனங்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. IKEA, Homes R Us, Watsons, FACES, Nine West, Hour Choice, Damas, Swarovski, Tommy Hilfiger, Marks & Spencer, Debenhams, H&M உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் பிராண்டகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.

துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்

  • Anu

    Related Posts

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: பெங்களூரு, திருச்சியிலிருந்து தம்மாமுக்கு புதிய சர்வதேச விமானங்கள்…..

    டாட்டா குழுமத்தின் துணை நிறுவனமான குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான Air India Express (IX) தனது சர்வதேச சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, Bengaluru (BLR) மற்றும் Tiruchirappalli (TRZ) ஆகிய இடங்களிலிருந்து Dammam (DMM) நகருக்கு…

    Read more

    ரியாத்தில் வசிப்பவர்களுக்கு Junior Courier Operations வேலைவாய்ப்பு!

    ரியாத்தில் வசிப்பவர்களுக்காக Paarsel நிறுவனம் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. Paarsel என்பது KSA-யின் முக்கிய நகரங்களில் B2B சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற வளர்ந்து வரும் உள்நாட்டு கூரியர் நிறுவனமாகும். வணிகங்களுக்கு நம்பகமான மற்றும் திறமையான டெலிவரி தீர்வுகளை வழங்குவதில்…

    Read more

    You Missed

    துபாயின் புதிய அடையாளம்: AI செஃப் உருவாக்கும் மெனு… மனிதர்கள் சமைக்கும் ஹோட்டல்!

    • July 17, 2025

    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    • January 4, 2025
    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    • January 2, 2025
    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து….. இந்திய இளம் மருத்துவரின் கனவு நொறுங்கியது!!!

    • January 1, 2025
    புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து….. இந்திய இளம் மருத்துவரின் கனவு நொறுங்கியது!!!

    பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம்: புத்தாண்டில் துபாயின் புதிய தொடக்கம்

    • January 1, 2025
    பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம்: புத்தாண்டில் துபாயின் புதிய தொடக்கம்

    உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு UAE விசா விண்ணப்பிக்க வேண்டுமா? வீட்டிலிருந்தே எளிதாக விண்ணப்பிக்கலாம்!

    • December 30, 2024
    உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு UAE விசா விண்ணப்பிக்க வேண்டுமா? வீட்டிலிருந்தே எளிதாக விண்ணப்பிக்கலாம்!