துபாயின் பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கரு மேகங்கள் சூழ்ந்திருப்பதால் மேற்கு மற்றும் தெற்கில் உள்ள சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், சில நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசக் கூடும். சாதாரணமாக காற்றின் வேகம் மணிக்கு 10 முதல் 25 கி.மீ., வேகத்தில் இருக்கும். உட்புற பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ., வரையிலான வேகம் வரை காற்று வீசக் கூடும்.
உட்புற பகுதிகளில் அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அபுதாபியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படும். துபாயை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்சம் வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.
அரேபியன் வளைகுடா பகுதியில் கடல் மிதமாகவும், ஓமன் கடல் பகுதியில் லேசான கொந்தளிப்புடனும் காணப்படலாம் என்றும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.