உலகின் பல நாடுகளிலும் பணம் இல்லா பரிவர்த்தனை செய்வதற்காக UPI முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஆன்லைன் மூலமாகவே ஒரு வங்கி கணக்கில் இருந்த மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் மாற்றும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் இன்னும் ஒரு படி மேலே போய் போன், கார்டு என எதுவும் இல்லாமல் உள்ளங்கையை மட்டும் பயன்படுத்தி பணம் அனுப்பும் முறையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது .
இனி UAE முழுவதும் எங்கு சென்று பொருட்கள் வாங்கினாலும், பொருட்களை வாங்கி முடித்த பிறகு கடைசியில் உள்ள பணம் செலுத்தும் மிஷினிற்கு நேராக உங்களின் உள்ளங்கையை மட்டும் காட்டினாலே போதும் பணம் செலுத்தி விடலாம். பொருட்கள் வாங்கிய பிறகு பணம் செலுத்துவதற்காக ஸ்வைபிங் கார்டு, போன் போன்ற எதையும் பயன்படுத்த தேவையில்லை.
Palm pay technology, 2024 ம் ஆண்டு முடிவதற்குள் செயல்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக Astra tech குழுமத்தின் technology development குழுமத்தின்நிறுவனம் அப்துல்லா அபு ஷெக் தெரிவித்துள்ளார். dubai fintech மாநாட்டில் இந்த பண பரிவர்த்தனை முறையை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பயோமெட்ரிக் முறையில் இந்த Palm pay technology செயல்படும் என சொல்லப்படுகிறது. பணம் செலுத்தும் மிஷின்கள் வாடிக்கையாளரின் உள்ளங்கை பதிவுகள் படித்து, அதன் மூலம் பணம் அனுப்பும்.
தற்போது இது சோதனை முறையாக உள்ளூர் சந்தைகள் சிலவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முழுமையாக 50,000 வரை பணம் அனுப்பும் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும் என அப்துல்லா தெரிவித்துள்ளார். வங்கிகளிலும் எதிர்காலத்தில் இந்த முறையை கொண்ட வரவம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆப்களில் தங்களின் உள்ளங்கையை பதிவு செய்து, அதன் மூலம் வாடிக்கையளர்கள் பணம் அனுப்ப முடியும். தற்போது போன்களில் எப்படி முகம் கண்டறியும் வசதி உள்ளதோ அதே முறையில் இதுவும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.