தற்போது யுஏஇ.,யில் விசா நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் யுஏஇ.,யில் வசிக்கும் அதிகமான மக்கள் வார இறுதி நாட்களில் ஓய்விற்காக செல்லும் இடம் ஓமனாக தான் உள்ளது. அருகில் இருப்பது, எளிதான விசா செயல்முறை, மனதை கவரும் இயற்கை காட்சிகள் போன்றவை இருப்பதால் பலரும் ஓமனுக்கு காரில் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஓமனுக்கு செல்லும் பாதைகள், நுழைவு கட்டணம், தேவையான சாலை ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனால் லேட்டஸ்டாக என்ன நடைமுறை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது ஓமனுக்கு காரில் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பாதைகள் :
துபாயில் இருந்து வருபவர்கள் the Hatta, Al Wajajah எல்லையை கடந்தே அதிகமானவர்கள் செல்வகிறார்கள். இது நேரடியான, அதே சமயம் பாதுகாப்பான வழியும் கூட. இந்த வழியாக சென்றால் ஒன்றரை முதல் 2 மணி நேரத்தில் ஓமனை அடைந்து விடலாம். இந்த நேரம் போக்குவரத்து நெரிசலை பொறுத்து மாறுபடலாம். துபாயில் இருந்து 140 கி.மீ., தூரத்தில் உள்ளது. ஷார்ஜாவில் இருந்து வருபவர்களுக்கு, வடக்கு பகுதியில் இருந்து மெக்ஹா சாலை வழியாகவும் ஓமனை அடையலாம். மெஹ்காவில் இருந்து வருவதற்கு Hatta, Fujairah and Khorfakkan வழியாக ஒரு பாதை, Wadi Al Helo, Kalba road வழியாக இரு வழிகளில் செல்லலாம்.
தேவையான ஆவணங்கள் :
* ஒரிஜினல் பாஸ்போர்ட்
* ஒரிஜினல் விசா அல்லது இ விசா பெற்றிருந்தால் அதன் நகல்
* அமீரக அடையாள அட்டை
* கார் பதிவு அட்டை
* கார் இன்சூரன்ஸ் சான்றிதழான ஆரஞ்சு கார்டு. இது ஓமனில் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்.
சோதனை நடைமுறை :
* ஓமன் எல்லைக்கு 500 மீட்டர் தூரம் முன்பாக சோதனை செய்யப்பட்டு, பாஸ்போர்ட் உள்ளிட்டவைகள் சரி பார்க்கப்படும்.
* எங்கிருந்தது வந்தது, எங்கு செல்கிறார்கள் என்ற விபரங்கள் சரி பார்க்கப்படும்.
* பிறகு பாஸ்போர்ட்டில் என்ட்ரி ஸ்டாம்ப் வைத்து வழக்கமான சோதனைகளுக்கு பிறகு அனுமதிப்பார்கள்.
* இங்கு நுழைவு கட்டணமாக 35 திஹ்ரான் செலுத்த வேண்டும்.
* பிறகு ஒரு சில பகுதிகளில் இருந்து வருபவர்களின் வாகனங்கள் மட்டும் கடைசி சோதனை சாவடியில் சோதனை செய்யப்படும்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்