சவுதி அரேபியாவில் ஹஜ் விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் ஒழுங்குமுறை மற்றும் வழிகாட்டுதல்கள் ஜூன் 2ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் ஜூன் 20ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் படி, முறையான அனுமதி பெறாமல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு 9000 திஹ்ரான் வரை அபராதம் விதிக்கப்படும். அதாவது, 10,000 சவுதி ரியால் அபராத தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் முறையான அனுமதி இல்லாமல் ஹஜ் பயணிகளை யாராவது வாகனங்களில் ஏற்றி வந்தால் அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு 50,000 சவுதி ரியால் அல்லத 49,000 திஹ்ரான் அபராதமாக விதிக்கப்படும்.
அனமதி இல்லாமல் மெக்கா நகருக்குள் ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு மத்திய பகுதி, புனித தலங்கள், ஹராமைன் ரயில் நிலையம், பாதுகாப்பு சோதனை மையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அனமதி கிடையாது. அப்படி விதியை மீறுபவர்கள் அவர்களின் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். அது மட்டுமல்ல சவுதி சட்டத்தின் படி குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் மீண்டும் சவுதிக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. அனுமதி இல்லாமல் ஹஜ் பயணிகளை அழைத்து வந்தாலும் அவர்களின் சிறை தண்டனை முடிந்த பிறகு குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் மீண்டும் சவுதிக்கு வருவது தடை செய்யப்படும்.
முறையான விசா இல்லாமல் வரும் எவரும் ஹஜ் மத சடங்குகளை செய்ய பட மாட்டார்கள் என்றம், ஹஜ் பயணிகள் அனைவரும் ஜூன் 2 முதல் 21 வரை மெக்கா நகருக்கு பயணம் செய்யவோ அல்லது தங்கவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுவரை 20,000 க்கும் அதிகமான விதிகளை மீறி ஹஜ் பயணம் செய்தவர்கள் மெக்கா நகரில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹஜ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்