இந்தியாவில் இருந்து யுஏஇ வரும் விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, இவர்கள் இந்தியாவில் இருந்து யுஏஇ வந்த அதே விமான நிறுவனத்திலேயே மீண்டும் இந்தியா திரும்பி செல்வதற்கான டிக்கெட்டையும் ரவுண்ட் ட்ரிப் டிக்கெட்டாக முன்பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
யுஏஇ வந்த பிறகு பயணிகள் பலரும் வேறு விமான நிறுவனத்தில் திரும்ப செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதால் பலரும் திரும்பி செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து பயணிகள், திரும்பி செல்வதற்கான டிக்கெட்டையும் முன்பதிவு செய்து தந்து பயணிகள் பாதுகாப்பாக திரும்பி செல்வதற்கு வழிகாட்டும் படி சில விமான நிறுவனங்களுக்கு யுஏஇ அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
பயணிகள் திரும்ப செல்வதற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து விட்டு வந்திருக்கிறார்களா என்பதை நன்கு சரிபார்க்கும் படி துபாய் விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பலரும் திரும்பி செல்வதற்கான போதிய ஏற்பாடுகளுடன் வருவதில்லை என டிராவல் ஏஜன்ட்களும் தெரிவிக்கிறார்கள்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்