யுஏஇ டிரான்சிட் விசாவிற்கு விண்ணபிப்பது எப்படி? முழு விபரம் இதோ…

டிரான்சிட் விசா என்பது நீண்ட பயணத்திற்கு நடுவே ஏதாவது ஒரு நாட்டில் இறங்கி, சில ஓய்வெடுத்து விட்டு பிறகு பயணத்தை தொடரலாம். அப்படி ஓய்வெடுக்கும் போது விமான நிலையத்திலேயே அமர்ந்து பொழுதை கழிக்காமல், அந்த நாட்டில் சில இடங்களை சுற்றி பார்க்கும் வாய்ப்பு அளிக்கும் அனுமதி சீட்டிற்கு டிரான்சிட் விசா என்று பெயர். யுஏஇ.,யில் 46 மணி முதல் 90 மணி நேரம் வரை தங்கி இருந்து சுற்றி பார்த்து விட்டு, மீண்டும் பயணத்தை தொடருவதற்கான விசாவிற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை :

* 3 மாதங்கள் வரை செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
* வெள்ளை பின்புலத்தில் இருக்கும் போட்டோ
* புறப்படும் இடம் துவங்கி, சென்றடையும் இடம் தவிர மூன்றாவது இடத்தில் தங்குவதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

* போலி நிறுவனங்களிடம் சிக்கி ஏமாறாமல் இருப்பதற்கு யுஏஇ.,ஐ அடிப்படையாகக் கொண்ட விமான நிறுவனங்களில் மட்டும் பயணத்திற்கான போக்குவரத்து விசாவை முன்பதிவு செய்ய வேண்டும்.

* யுஏஇ டிரான்சிட் விசா பெற வேண்டும் என்றால் முதலில் நீங்கள் பயணிக்கும் விமான நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். ஏஜென்சி மூலம் முன்பதிவு செய்திருந்தால் விசா பெறுவதற்கு ஏஜென்சி உங்களுக்கு உதவும்.

* ஏஜென்சி மற்றும் விமான நிறுவனமும் அனைத்தையும் செய்து கொண்டுப்பார்கள் என்றாலும் விசா நிலவரத்தை தெரிந்து கொள்வது சிறப்பானது.

டிக்கெட்டை எங்கு வாங்க வேண்டும் ?

யுஏஇ., விமான நிறுவனங்கள் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சில் மட்டுமே டிக்கெட்டை பெற வேண்டும். ஒருவேளை துபாய்க்குச் செல்ல விரும்பினால், உங்கள் டிக்கெட்டுகளை எமிரேட்ஸ் ஏர்லைன் அல்லது ஃப்ளை துபாய் ஆகியவற்றில் வாங்க வேண்டும். ஒருவேளை, நீங்கள் அபுதாபிக்கு செல்ல விரும்பினால், உங்கள் டிக்கெட்டுகளை எதிஹாட் ஏர்வேஸ் அல்லது ஏர் அரேபியாவில் இருந்து பெற வேண்டும்.

டிரான்சிட் விசாவின் ஆயுட் காலம் :

டிரான்சிட் விசா 46 மணி நேரம் முதல் 90 மணி நேரம் வரை மட்டுமே செல்லத்தக்கதாகும். ஒருவேளை நீங்கள் 46 மணி நேரத்திற்கான டிரான்சிஸ்ட் விசா பெற்றிருந்தால் அதை 90 மணி நேரமாக நீட்டிக்க முடியாது. யுஏஇ.,க்கு நீங்கள் வந்தது முதல் அடுத்த 48 மணி நேரம் வரை இந்த விசாவை இலவசமாக பயன்படுத்தலாம். விசா வழங்கப்பட்ட 48 மணி நேரத்தில் நீங்கள் மீண்டும் நாட்டை விட்டு புறப்பட்டு விட வேண்டும். ஒருவேளை நீங்கள் 90 மணி நேரம் டிரான்சிட் விசா பெறுவதாக இருந்தால் அதற்கு 50 திஹ்ரான் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த விசாவையும் நீட்டிக்கவோ, புதுப்பிக்கவோ முடியாது. நாட்டை விட்டு புறப்படும் போது நீங்கள் 300 திஹ்ரான் மட்டும் செலுத்தினால் போதும். அதற்கு மேல் ஏஜன்சியோ, விமான நிறுவனமோ கட்டணம் கேட்டால் நீங்கள் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்

  • Related Posts

    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    Dubai: துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஜுமேரா ஜாகிங் ட்ராக் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் நோக்கில் ஹை ஹீல்ஸ் அணிவதை தடை செய்துள்ளது. 7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ட்ராக் நடப்பவர்கள் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்களிடையே…

    Read more
    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    இந்த செய்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பயன்படுத்துபவர்களுக்கு முக்கியமானது. தங்கள் ஸ்மார்ட்போன்கள் இனி வாட்ஸ்அப்பை ஆதரிக்காது என்பதை அறிந்து, புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிடலாம். 2025 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி முதல், iOS 15.1…

    Read more

    You Missed

    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    • January 4, 2025
    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    • January 2, 2025
    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து….. இந்திய இளம் மருத்துவரின் கனவு நொறுங்கியது!!!

    • January 1, 2025
    புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து….. இந்திய இளம் மருத்துவரின் கனவு நொறுங்கியது!!!

    பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம்: புத்தாண்டில் துபாயின் புதிய தொடக்கம்

    • January 1, 2025
    பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம்: புத்தாண்டில் துபாயின் புதிய தொடக்கம்

    உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு UAE விசா விண்ணப்பிக்க வேண்டுமா? வீட்டிலிருந்தே எளிதாக விண்ணப்பிக்கலாம்!

    • December 30, 2024
    உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு UAE விசா விண்ணப்பிக்க வேண்டுமா? வீட்டிலிருந்தே எளிதாக விண்ணப்பிக்கலாம்!

    UAE: சர்வதேச எண்ணெய் விலை நிலைமையால் ஜனவரி-இல் பெட்ரோல் விலை அதிரடியாக குறையும்!!

    • December 30, 2024
    UAE: சர்வதேச எண்ணெய் விலை நிலைமையால் ஜனவரி-இல்  பெட்ரோல் விலை அதிரடியாக குறையும்!!
    Optimized with PageSpeed Ninja