யுஏஇ.,யில் மே 20 ம் தேதியன்று தங்கத்தில் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
மே 20 ம் தேதி பகல் நேர நிலவரப்படி, யுஏஇ.,ல் 24 காரட் தங்கத்தின் கிராமுக்கு 296.0 திஹ்ரான் அதிகரித்துள்ளது. காலையில் சந்தை நேர துவக்கத்தின் போது 292.5 திஹ்ரானாக இருந்த தங்கத்தின் விலை, உயர்ந்து, பிறகு மீண்டும் மாலையில் 293.0 திஹ்ரானாக ஆக இருந்தது. அதே சமயம் 22 காரட் தங்கத்தின் விலை 271.25 திஹ்ரானாகவும், 21 காரட் தங்கத்தின் விலை 262.5 திஹ்ரானாகவும், 18 காரட் தங்கத்தின் விலை 225.0 திஹ்ரானாகவும் உள்ளன.
பொதுவாக இது போல் தங்கத்தின் விலை அதிரடியாக உயரும் போது துபாய் தங்க நகை வியாபாரிகள், என்ன நடக்கிறது என்பதை பொறுமையாக கண்காணிப்பது வழக்கம். அதனால் இந்த முறையும் தங்கத்தின் விலை மீண்டும் குறையும் என்றும், தங்கம் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்காலிகமான ஒன்று தான் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். மே 10 ம் தேதி அட்சய திருதியை நாளில் தான் அதிகமானவர்கள் வந்து தங்கம் வாங்கி சென்றதால், தற்போது விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என சொல்லப்படுகிறது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி, தங்கத்திற்கான வட்டி விகிதத்தை குறைத்ததே உலகம் முழுவதும் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஆசிய சந்தைகளிலும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பளமும் மத்திய கிழக்கு நாடுகளில் சந்தைகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மற்றொரு புறம் ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்டவைகளும் சந்தைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்