குழந்தைகளின் கோடை கால வகுப்பிற்காக செலவிடும் தொகை யுஏஇ.,யில் வாழும் பெற்றோர்களை கவலை அடைய வைத்துள்ளது. இந்த தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
யுஏஇ.,யில் கோடை கால பயிற்சி வகுப்புகளுக்கு ஒரு வாரத்திற்கு செலவிடும் ஆரம்ப தொகை 311 திஹ்ரைன்களாகும். மொத்தமாக ஒரு மாதத்திற்கு 1244 திஹ்ரைன்கள் செலவிட வேண்டி உள்ளது. அதிலும் 2 குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் 8000 திஹ்ரைன்கள் வரை செலவிட வேண்டி உள்ளது. அதிலும் சில பயிற்சி வகுப்புகளில் தனித்துவமான பயிற்சிகள், பொழுதுபோக்கு விஷயங்களை செய்து தருவதால் அதற்காக வாரத்திற்கு கூடுதலாக 779 திஹ்ரைன் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.
யுஏஇ.,யில் பெரும்பாலான பள்ளிகள் ஜூலை 05ம் தேதி முதல் கோடை விடுமுறைக்காக மூடப்பட உள்ளன. இந்நிலையில் கோடை பயிற்சி வகுப்புகளுக்கு பிள்ளைகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை நினைத்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். இன்னும் சில பெற்றோர்கள் அதிக தொகை செலவிட வேண்டும் என்பதற்காக கோடை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பாமல் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்