யுஏஇ.,யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்களை இந்த ஆண்டில் முடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. பல்வேறு மீடியாக்களுக்கு சொந்தமான பொழுதுபோக்கு அம்சங்களை அவர்களிடம் இருந்து திருடி, சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக இந்த இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ரமலான் மாதத்தில் இது போன்ற சட்ட விரோதமாக விதிகளை மீறி இயங்கிய பெரும்பாலான இணையதளங்கள் முடக்கப்பட்டது. பல்வேறு மீடியாக்களுக்கு சொந்தமான கருத்துக்களை சட்ட விரோதமாக திருடி, ஒளிபரப்பி வந்ததால் ரமலான் மாதத்தில் InstaBlock நடவடிக்கை துவங்கப்பட்டது. இதுவரை மொத்தமாக 1117 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சகத்தின் Intellectual Property Rights Sector பிரிவில் துணை செயலாளராக இருக்கும் டாக்டர்.அப்துல்ரஹ்மான் ஹசன் அலி முயானி தெரிவித்துள்ளார்.
2023 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சட்ட விரோத இணையதளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வெறும் 62 சட்ட விரோத இணையதளங்கள் மட்டும் முடக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் 5 மாதங்களிலேயே ஆயிரத்திற்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது பலவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காப்பி ரைட் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்