வேலை நேரம் உள்ளிட்ட முக்கிய நேரங்களில் தொல்லை தரும் அளவிற்கு மார்கெட்டிங் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் தொலைப்பேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். இது போன்ற அனுபவங்கள் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தொலைப்பேசி வாடிக்கையாளர்களும் சந்தித்து இருப்பார்கள்.
இது போன்ற தேவையற்ற அழைப்புகள் வந்து தொந்தரவு தருவதாக யுஏஇ அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதனால் இவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் புதிய கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்யவும் யுஏஇ அரசு முடிவு செய்துள்ளது. அப்படி தொந்தரவு செய்யும் நிறுவனங்களுக்கு விரைவில் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரவை கூடி முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு என்று ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது போன்ற தேவையற்ற தொந்தரவு தரும் அழைப்புக்களை கட்டுப்படுத்த 2022ம் ஆண்டு காலர் ஐடி சேவையை அறிமுகம் செய்தது. அழைப்புகள் தானாக பதிவும் வகையில் செய்யப்பட்டு, போனில் நம்பர் தெரியும் படி செய்யப்பட்டுள்ளது. போனில் நம்பரை பார்த்து விட்டு எடுக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இது தான் தற்போது வரை யுஏஇ.,யில் இருக்கும் வரை கட்டுப்பாடுகள் ஆகும்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்