UAE விசா விண்ணப்பிக்க வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்தே எளிதாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அரசின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான கூட்டாட்சி அதிகாரம் (ICP), 30, 60 அல்லது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். entry permit’ க்கான விண்ணப்பத்தை உங்கள் ஃபோனில் இருந்தே Apply பண்ணலாம்.
Step 1: Download and log in on the UAEICP App
Apple, Android மற்றும் Huawei போன்ற அனைத்து முக்கிய ஃபோன் பிராண்டுகளுக்கும் ‘UAEICP’ மொபைல் பயன்பாடு கிடைக்கிறது. இந்த பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து, உங்கள் UAE Pass ஐப் பயன்படுத்தி எளிதாக உள்நுழையலாம்.
உங்கள் ஃபோனில் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய விரும்பவில்லை என்றால், UAE அரசின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான கூட்டாட்சி அதிகாரம் (ICP) இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி: smartservices.icp.gov.ae. செயல்முறை மாற்றமில்லை, ஃபோன் பயன்பாடு அல்லது இணையதளம் என எதைப் பயன்படுத்தினாலும், விண்ணப்ப செயல்முறை ஒரே மாதிரியாக இருக்கும்.
Step 2: Select the New Visa Service
அடுத்ததாக Issuance an Entry Permit (New Visa) சேவையைத் தேர்ந்தெடுத்து, ‘விசா வகை’ என்பதை உறவினர் அல்லது நண்பர் என தேர்ந்தெடுக்கவும். ஒரே ஒரு முறை வருகைக்கு மட்டுமே விசா தேவையா அல்லது பல முறை வருகைக்கு செல்லுபடியாகும் விசா தேவையா என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 30, 60 அல்லது 90 நாட்கள் என தாங்கள் தங்கவிருக்கும் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
Step 3: Confirm the Information
முதல் முறையாக உள்நுழைந்தால், உங்கள் தனிப்பட்ட விவரங்களை (பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் விவரங்கள் போன்றவை) உள்ளிட வேண்டும். ஏற்கனவே பதிவு செய்த பயனராக இருந்தால், உங்கள் தனிப்பட்ட விவரங்களை உறுதிப்படுத்தவும். உங்கள் தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அவற்றை புதுப்பிக்கவும்.
Step 4: Make the payment
விசா கட்டணத்தை ஆன்லைன் மூலம் பாதுகாப்பாக செலுத்தவும். கட்டணம் தங்கும் காலம் மற்றும் விசா வகையைப் பொறுத்து மாறுபடும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படும். விசா வழங்கும் செயல்முறை மிகவும் விரைவானது. பொதுவாக 48 மணி நேரத்திற்குள் விசா அங்கீகாரம் கிடைக்கும்.
விண்ணப்பம் அங்கீகாரம் பெற்ற பிறகு, நீங்கள் அதை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப நிலையை ஆன்லைன் மூலம் எளிதாக கண்காணிக்கலாம். விண்ணப்பம் குறித்த மேலும் விவரங்களுக்கு ICP ஐ தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 600522222
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்