புத்தாண்டு தினத்தன்று அல் வத்பா பகுதியில் உள்ள ஷேக் ஜாயத் திருவிழாவில் 50 நிமிடங்கள் நீடிக்கும் உலகின் மிகப்பெரிய வானவேடிக்கை காட்சியை அபுதாபி ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவில் ஆறு கின்னஸ் உலக சாதனைகளை முறியடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 20 நிமிடங்களுக்கு மேல் வான்வெளியில் கலை வடிவங்களை உருவாக்கும் 6,000 ட்ரோன்கள் கொண்ட ஷோவும் அடங்கும்.
மாலை 6 மணி முதல் ஒவ்வொரு மணிக்கும் வானவேடிக்கை காட்சிகள் நடைபெறும். இரவு 12 மணிக்கு சாதனை படைக்கும் நள்ளிரவு நிகழ்ச்சியுடன் இது முடியும். மேலும் லேசர் ஷோக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு செயல்பாடுகளும் இருக்கும்.
யாஸ் தீவில் இரண்டு வானவேடிக்கை காட்சிகள்:
யாஸ் தீவில் உள்ள யாஸ் பே விரிகுடாவில் இரவு 9 மணி மற்றும் நள்ளிரவு என இரண்டு வானவேடிக்கை காட்சிகள் நடைபெறும்.
கார்னிஷ் கடற்கரையிலும் வானவேடிக்கை:
திருவிழாக்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களுக்கு பிரபலமான இடமான கார்னிஷ் கடற்கரையிலும் நீரோரக் காட்சிகளுடன் வானவேடிக்கை காட்சிகள் நடைபெறும்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்
லிவா சர்வதேச திருவிழா கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், அற்புதமான வானவேடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை வழங்குகிறது. பார்வையாளர்கள் கிளாசிக் கார் கண்காட்சி, திரைப்பட திரையிடல்கள், மோரீப் மணல் குன்று சந்தை மற்றும் பிற செயல்பாடுகளை அனுபவித்து 2025-ஐ ஸ்டைலாக வரவேற்கலாம். திருவிழாவைத் தவிர்த்து, அல் தஃப்ராவில் உள்ள மதீனத் ஜாயத் பொது பூங்கா, கயாதி மற்றும் அல் மர்ஃபா பகுதியில் உள்ள அல் முகைரா கடற்கரை போன்ற பிற இடங்களிலும் வானவேடிக்கை காட்சிகள் நடைபெறும்.
அமைதியான மாலை நேரத்தை அனுபவிக்க அப்ரஹாமிக் குடும்ப வீடு நடத்தும் கிறிஸ்துமஸ் கிராமத்தில் தங்களைக் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கான பனி காகிதக் கைவினைப் பொருட்கள், ரெயின்டீர் உணவு தயாரித்தல், விடுமுறை புகைப்படம் சட்டகம் தயாரித்தல் போன்ற பனி-கருப்பொருள் கொண்ட செயல்பாடுகள் மற்றும் பிற பருவகால வேடிக்கைகள் இங்கு வழங்கப்படுகின்றன.