UAE கட்டாய சுகாதார காப்பீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
சுகாதார காப்பீடு என்பது நம்முடைய நிதிப் பாதுகாப்பிற்கான ஒரு முக்கியமான கருவியாகும். இது நம்மை மற்றும் நம் குடும்பத்தினரை எதிர்பாராத மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாக்கிறது.
தனியார் துறை ஊழியர்கள் மற்றும் வீட்டு உதவியாளர்களுக்கான புதிய அடிப்படை சுகாதார காப்பீட்டு திட்டத்தை இன்று யுஏஇ.,யில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து எமிரேட்டுகளிலும் உள்ள தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும், வீட்டு வேலை செய்யும் பணியாளர்களையும் உள்ளடக்கி, அனைவருக்கும் அடிப்படை சுகாதார பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அபுதாபி மற்றும் துபாய் போன்று, ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா ஆகிய எமிரேட்டுகளில் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கும் இனி கட்டாய சுகாதார காப்பீடு கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி!
2024 ஜனவரி 1-க்கு முன்பு வழங்கப்பட்ட வேலை அனுமதிகள் கொண்ட ஊழியர்கள் தற்போதைக்கு இந்த கட்டாயத்தை பின்பற்றத் தேவையில்லை. தற்போதைய அனுமதிகள் காலாவதியான பின்னர், புதுப்பிப்பிற்கு கட்டாய சுகாதார காப்பீடு தேவைப்படும்.
எப்படி பெற முடியும்?
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டம் DubaiCare Network மூலம் கிடைக்கிறது. தொழிலாளர்கள் DubaiCare Network மூலமாக புதிய காப்பீட்டு திட்டத்தை வாங்கலாம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவங்களிலும். மற்றும் நாடு முழுவதும் உள்ள வணிக சேவை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் மூலம் வாங்கலாம்.
அமீரக அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய அடிப்படை மருத்துவ காப்பீட்டு திட்டம், 2 ஆண்டுகள் செல்லுபடியாகும். இரண்டாவது ஆண்டின் காப்பீட்டு கட்டணம் வீசா ரத்து செய்யப்பட்டால் திரும்ப பெற முடியும்.
- ஆண்டுக்கு கட்டணம்: Dh320.
- காலதாமத காலம் இல்லை: நீண்டகால நோய்கள் உள்ள தொழிலாளர்களுக்கும் உடனடி பயன் கிடைக்கும்.
- வயது வரம்பு: 1 முதல் 64 வயதுவரை காப்பீடு செய்யப்படும். 64 வயதுக்கு மேல் உள்ளவர்கள் சமீபத்திய மருத்துவ அறிக்கைகளுடன் மருத்துவ விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அமீரகத்தில் புதிய அடிப்படை மருத்துவ காப்பீடு: முக்கிய விவரங்கள்
அமீரகத்தின் புதிய அடிப்படை மருத்துவ காப்பீட்டு திட்டம், மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அவசியம் உள்ள நோயாளிகளுக்கு 20% கோபேய்மென்ட் உடன் இடமிருந்து சிகிச்சை செலவுகளை காப்பாற்றும்.
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மருத்துவ சந்திப்புக்கும் அதிகபட்சமாக 500 திர்ஹாம் செலுத்த வேண்டும்.
- ஆண்டுக்கு 1,000 திர்ஹாம் வரை மருந்துகளுக்கான செலவுகள் இந்த வரம்புக்குள் உள்ளன.
- இந்த வரம்பை மீறிய பிறகு, முழு சிகிச்சை செலவுகளையும் (100%) காப்பீடு நிறுவனம் ஏற்கும்.
இந்த திட்டம், தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் இருவருக்குமான மருத்துவ சிகிச்சையை மேலும் எளிதாக்குகிறது.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்