visit visas மூலம் துபாய் வருபவர்கள் 3000 திஹ்ரான் ரொக்கம், திரும்பி செல்வதற்கான டிக்கெட், அமீரகம் வருவதற்கு முன் அங்கு தங்குவதற்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
துபாய் வரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுவதல்களுடன், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சில பயணிகள் தங்களுக்கு அடிப்படையாக தேவையான விஷயங்கள் இல்லாமல் துபாய் வருகிறார்கள். இது போல் அடிப்படை விஷயங்கள் இல்லாமல் துபாய் வருபவர்கள் இந்திய விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தப்படுவதுடன், அவர்கள் விமானத்தில் ஏறவும் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி அதையும் தாண்டி வருபவர்கள் துபாய் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.
இது குறித்து தஹிரா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக தலைவருமான ஃபிரோஸ் மல்லியாக்கல் கூறுகையில், துபாய்க்கு வருபவர்கள் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது செல்லக் கூடிய வகையிலான பாஸ்போர்ட் உடனான விசா வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக திரும்ப செல்வதற்கான டிக்கெட்டும் வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் முன் கூடயடியே சரி பார்த்த பிறகே அவர்கள் துபாய் வர அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் துபாயில் தங்குவது உள்ளிட்ட தேவைக்கு போதுமான அளவு பணம் வைத்திருக்க வேண்டும். அது 3000 திஹ்ரானுக்கு நிகரான எந்த நாட்டின் நாணயமாகவோ அல்லது கிரெடிட் கார்டாகவோ இருக்கலாம். யுஏஇ தங்குவதற்கு சரியான முகவரி சான்றினை அளிக்க வேண்டும். அது உறவினர், நண்பர்களின் வீடு அல்லது முன்பதிவு செய்யப்பட்ட ஓட்டல் முகவரியாகவோ இருக்கலாம்.
துபாய் வருபவர்களுக்கு குறித்த பாதுகாப்பை உறுதி செய்யவும், அதிக காலம் அனுமதியில்லாமல் பலரும் தங்குவதை தடுக்கவும், சுற்றுலாத் துறையின் தரத்தை உயர்த்தவும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்