சமீபத்தில் யுஏஇ.,யில் 10 ஆண்டுகள் வாழுவதற்கான புதிய ப்ளூ விசா அறிவிக்கப்பட்டது. இது நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புக்களை புதிதாக உருவாக்கும் என நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இது பற்றி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்ற அமைச்சர் டாக்டர் அம்னா பின் அப்துல்லா அல் தஹாக் கூறுகையில், இந்த விசா, உலகம் முழுவதிலுமிருந்து நிலைத்தன்மை மற்றும் காலநிலை வெற்றியாளர்கள் துறையில் திறமைகளை ஈர்க்கும். இது திறமையானவர்களுக்கு வேலை வாய்ப்பு பாதகாப்பையும் ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
Environmental, conservation, and governance (ECG) sector, Sustainable development, Marine life conservation, Climate action ஆகிய துறைகளில் தங்களின் பங்களிப்பை அளிப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வசிப்பதற்கான ப்ளூ விசா வழங்கப்படுகிறது. கடல் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, காற்று தரம், தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் தங்களின் பங்களிப்பை வழங்குபவர்களுக்கு ப்ளூ விசா பெறுவதற்கான தகுதி உடையதாக சொல்லப்படுகிறது.
அதோடு சர்வதேச அமைப்புக்கள், அரசு சாரா அமைப்புக்கள், சர்வதேச விருது வென்றவர்கள், ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுபவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் இந்த விசா பெறுவதற்கு தகுதி உடையவர்கள். சாதனை படைத்த மாணவர்கள், பட்டதாரிகள், தொழில்முனைவோர் ஆகியோரும் இந்த விசா பெறுவதற்கு தகுதியானவர்கள். 5 ஆண்டுகள் வாழ்வதற்கான விசாவிற்கு க்ரீன் விசா என்று பெயர். முதலீட்டாளர்கள், திறமையான பணியாளர்கள், தொழில் துவங்குவோர் உள்ளிட்டோருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்