யுஏஇ.,யில் இனி அப்பாக்களுக்கும் 42 நாட்கள் மகப்பேறு லீவு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யுஏஇ.,யில் மகப்பேறு மற்றும் பிரசவ கால விடுப்பினை மாற்றி அமைத்திருப்பதாக Global legal firm Baker McKenzie அறிவித்துள்ளது. தாய்மார்களுக்கான விடுப்பு நாட்களை ஒரு வருடமாக உயர்த்தி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்மார்களுக்கு 52 வாரங்கள் விடுமுறை அளிக்கப்படும். அதில் 26 வாரங்கள், அதாவது 182 நாட்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும். தாய்மார்கள் மட்டுமின்றி, தந்தைமார்களுக்கும் மகப்பேறு விடுப்பிற்கான தகுதி உண்டு என தெரிவித்துள்ளது.
தந்தைமார்களுக்கு 42 நாட்கள், அதாவது 6 வாரங்கள் முழு சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மகப்பேறு விடுப்புடன் பெற்றோர்களுக்கு இன்னும் பல சலுகைகளும் வழங்கப்படுவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய மகப்பேறு விடுப்பு கொள்கைகளின்படி, பெண்களுக்கு ஒரு ஆண்டு முழுவதுமாக விடுப்பு வழங்குவது சட்டப்பூர்வமாக்கப்பட உள்ளது.
யுஏஇ.,யில் உள்ள கம்பெனிகள் ஊழியர்களின் நலனுக்காக அவர்களின் பணி நேரத்தில் தளர்வு வழங்கி உள்ளதுடன், நீண்ட காலம் மகப்பேறு விடுப்பையும் நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் Alpha Nero நிறுவனமும் 70 நாட்கள் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கும் முறையை அறிவித்தது.
துபாயில் உள்ள Galadari நிறுவனமும் ஒரு ஆண்டு கால மகப்பேறு விடுமுறைக்கு பிறகும் 3 மாதங்கள் விடுப்பு வழங்கும் வகையில் புதிய மகப்பேறு விடுப்பு கொள்கையை கொண்டு வந்தது. பிரசவத்திற்கு பிறகு வேலைக்கு திரும்பியதும் பெண் ஊழியர்கள் அடுத்த 6 மாதங்களுக்கும் 28 நாட்கள் வரை வீட்டில் இருந்தே பணியாற்றும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த 28 நாட்களை வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை தொடர்ந்தோ அல்லது இடைவெளி விட்டோ எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பு பெண் ஊழியர்களுக்கு இல்லை என்றால் 24 நாட்கள் வரை வேலை நேரத்தில் பாதியாக மட்டும் பணியாற்றலாம். யுஏஇ.,ஐ பொறுத்தவரை 45 நாட்கள் மகப்பேறு விடுப்பு கட்டாயமாகும். புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தை பிறந்து 2 ஆண்டுகள் வரை தினசரி வேலை நேரத்தில் 30 நிமிடங்கள் வீதம் 2 இடைவெளிகள் வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்