துபாயில் வசிப்பவர்களுக்காக துபாயை சேர்ந்த விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனம் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. எமிரேட்ஸ் இணையதளத்தில் தகுதிகள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொண்டு, விபரங்களை தெரிந்து கொண்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம்.
யுஏஇ.,ல் வசிக்கும் தகுதி உள்ள அனைத்து நாட்டினர்களும் ஏற்ற வகையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எமிரேட்சில் குழுமம் சமீபத்தில் தான் 20 வாரங்களுக்கான சம்பளத்தை போனசாக கொடுப்பதாக அறிவித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு எமிரேட்ஸ் குழுமத்தில் அதிக லாபம் கிடைத்துள்ளதால் ஊழியர்களுக்கு போனஸ் தருவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
எமிரேட்ஸ் நிறுவன வேலைவாய்ப்பிற்கான தகுதிகள் :
* customer service/ hospitality பிரிவில் ஒரு வருடத்திற்கும் மேலாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* பல தரப்பட்ட கலாச்சார மக்களையும் கையாளவும், உடன் பணிபுரிபவர்களையும் திறமையாக, நல்ல அணுகுமுறையுடன் கையாள தெரிந்தவராக இருக்க வேண்டும்.
* குறைந்தபட்ச கல்வி தகுதி பள்ளியில் உயர்கல்வி (கிரேடு 12) படித்திருக்க வேண்டும்.
* ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மற்ற மொழிகள் பேச தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.
* குறைந்தபட்சம் 160 செ.மீ., உயரமும், விரல்களில் நிற்கும் போதும் 212 செ.மீ., வரை உயரத்தை அடையக் கூடியவராக இருக்க வேண்டும். விமானங்களில் அனைத்து விதமான அவசர உபகரணங்களை எடுக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்பதால் இந்த உயரம் அவசியமாகிறது.
* நீங்கள் எமிரெட்ஸ் குழுவில் பணியில் இருக்கும் போது சீருடையை தாண்டி கண்ணில் தெரியும் படி பச்சை குத்தி இருக்கக் கூடாது.
சம்பள விபரங்கள் :
* அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 4430 திஹ்ரான்.
* பறப்பதற்கான சம்பளம் – மாதத்திற்கு சராசரியாக 80 முதல் 100 மணி நேரம் பயணித்தால் ஒரு மணி நேரத்திற்கு 63.75 திஹ்ரான் என்ற கணக்கில் வழங்கப்படும்.
* சராசரியாக மொத்த மாத சம்பளம் 10,170 திஹ்ரான்.
* உணவு, ஓட்டலில் தங்குவதற்கான பிடித்தம் தொகை விமான நிலையம் சார்பில் அந்த கம்பெனிக்கு வழங்கப்பட்டு விடும்.